பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய பறவை பறந்துவங்தது. அது லபக்' கென்று தண்ணிருக்குள் பாய்ந்தது. தன் அலகினல், ஒரு மீனைக் கொத்திக்கொண்டு மேலே பறந்து சென்றது. அதைப் பார்த்தான், மூத்த பையன். உடனே அம்மாவிடம், அம்மா, அம்மா, பார்த் தாயா? கண் மூடிக் கண் திறப்பதற்குள் அங் தப் பறவை மீனைத் துரக்கிக்கொண்டு பறந்து விட்டது! எப்படி அம்மா அந்தப் பறவை யால் கினைத்தபடி பறக்க முடிகிறது' என்று கேட்டான். சிறகுகளினுல்தான் அது பறக்கிறது. அதன் சிறகுகள் அசைவதைப் பார்த்தாயா?” என்ருள் அம்மா, - "அதுசரி. ஆல்ை, கீழே இறங்கும்போது சிறகுகள் அசையவே இல்லையே!” அம்மா அதற்குப் பதில் சொல்ல முயன் ருள். சிறுவனுக்கு அது அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை. "அம்மா, கமக்கும் சிறகு இருந்தால்......? பறவையைப் போல வானத்திலே பறக்கலாம் அல்லவா?" "பறக்கலாம். ஆல்ை, ஆண்டவன் நமக் குச் சிறகுகளைப் படைக்கவில்லையே!” - "ஆண்டவன் படைக்காது போ ன ல் என்ன? நாமே சிறகுகள் செய்து கொள்ள முடியாதா?” 69