பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்துவிட்டு வாளை ஒங்குகிருர். சிறுவன் சிறிதுகூட அஞ்சவில்லை. ஆடாமல் அசை யாமல் அப்படியே உட்கார்ந்திருக்கிருன். வித்தைக்காரர் சொன்னபடி செய்து காட்டுகிருர். பழம் இரண்டாகிறது. பைய னுக்கு எவ்வித ஆபத்துமில்லை. பெரியவரின் வித்தையையும், சிறுவனின் வீரத்தையும் மாணவர்கள் கைதட்டிப் பாராட்டுகிருர்கள். அவனுடைய பள்ளியிலே நீச்சல் குளம் ஒன்று இருந்தது. அது மிகப் பெரிய குளம், அதன் குறுக்கே இரண்டு பாலங்கள் கூட இருந்தன. அந்தக் குளத்திலே அவன் தின மும் நீச்சலடிப்பான். கரையோரமாக ஒரு மாணவன் கின்ருல், அவனுக்குப் பின்புற மாகப் பூனைபோல் செல்வான். லபக் கென்று அவனைப் பிடித்து உள்ளே தள்ளிவிடுவான். அவன் அந்தப் பள்ளிக்கு வந்த புதிதில், ஒரு நாள் இப்படித்தான் ஒரு மாணவனைப் பிடித்து வேடிக்கையாகத் தள்ளிவிட்டான். எப்போதுமே தன் வயதுப் பையன்களை அல்லது தன்னைவிடச் சிறியவர்களைத்தான் அவன் தள்ளுவது வழக்கம். அந்தப் பைய னும் பார்ப்பதற்கு மிகச் சிறியவன்போல் தான் இருந்தான். ஆல்ை உண்மையிலே அவன் வயதில் பெரியவன்; மேல் வகுப்பில் படிப்பவன்; பள்ளி விளையாட்டுப் போட்டி களில் முதல் பரிசு பெறுபவன். அவன் சும்மா இருப்பான சண்டைக்கு வந்துவிட்டான். 89