உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

kead கும் குர் to a fim de மணமக்கள் எடுக்க வேண்டிய சபதம் 9 குடும்பநலப் ப பிரச்சாரம் ஆளுங்கட்சியாக இருக் கின்ற நாங்கள், ஆளுகின்ற பொறுப்பை ஏற்றுக்கொண்ட ந்த காலத்திலேயிருந்து மாத்திரமல்ல, அறிவியக்கம் நாட் லே பரவிட வேண்டும் என்ற முறையில் நாங்கள் பிரச்சாரத் திலே ஈடுபட்டிருந்த அந்தக் காலந்தொட்டு, கடந்த 30 அல்லது 40 ஆண்டுகாலமாக அறிவியக்கக் கொள்கைகளிலே ஒன்றாக இந்தக் கொள்கையை எடுத்துச் சொல்லி வருகிறோம்.பிள்ளை களை அதிகம் பெறுவதால் வசதி வாய்ப்புகள் அந்தக் குடும்பங் களிலே அற்றுப் போய்விடுகின்றன என்ற தொல்லை மாத்திர மல்லாமல், நல்ல வலிவோடும் - பொலிவோடும் -வளத்தோடும் - வல்லமையோடும் அந்தக்குழந்தைகள் வளரமுடியாது. அவை களுக்கேற்ற சத்துணவை அளித்திட வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் என்ற இந்தக் காரணங்களைக் காட்டியும், இல் வாழ்வு மேற்கொண்ட கணவனும், மனைவியும் தங்களுடைய இல்வாழ்க்கையிலே பெரும்பகுதி குழந்தைகளை வளர்ப்பதற்கே செலவிடவேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும் என்கின்ற காரணத்தினால், இல்வாழ்க்கை இன்பத்தை அவர்கள் உய்த்துணர முடியாது என்பதனை அடிப்படையாகக் கொண்டு நீண்ட நெடுங்காலமாக அறிவியக்கக் கருத்துக்களிலே ஒன்றாக தை எடுத்துச் சொல்லி வருகின்றோம். தஞ்சையும் தீவிர இயக்கமும் மாநில, மத்திய அரசுகளும் கடந்த பல ஆண்டு காலமாக இந்தக் கொள்கையை மக்களிடத்திலே பரப்பிவருகிறது என்றா லும், மெல்ல மெல்லத்தான் இந்தக் கருத்து மக்கள் உள்ளத் திலே பதியத்தொடங்கி இன்றைக்கு, இனிமேல் பிரச்சாரம் அதிகமாகத் தேவையில்லை என்ற அளவுக்குக் கூட குடும்பநலத் திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிட்ட ஒரு நிலைமை உருவாகியிருக்கின்றது. தஞ்சை மாவட்டத்திற்குச் சென்றிருந்தேன். தஞ்சை மாவட்டத்தில் 15,000-க்கு மேற்பட்ட வர்கள் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கணக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் என்னிடத்தில் காட்டினார்.