உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 த வட ஆர்க்காடு மாவட்டத்திலே மாத்திரம் ஐந்தாண்டு காலத்தில், ஏறத்தாழ 97 ஆயிரம் பேருக்கு வீட்டு மனைப் பட்டா, நிலப்பட்டா அளிக்கப்பட்டிருக்கிறது. இ போது ஒரு ஐயாயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாவும், நிலப் பட்டாவும் அளிக்கப்பட்டுள்ளது. நம்முடைய மாண்புமிகு அமைச்சர் - வருவாய்த்துறை அமைச்சர் நண்பர் ப. உ. சண் முகம் அவர்களுடைய சீரிய முயற்சியினால், கடந்த இரண்டு மூன்று ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேருக்கான பட்டாக்கள், வீட்டுமனைகள், அதைப் போலவே சாகுபடிக்கான நிலங்கள், நிலமற்ற ஏழை எளியவர்களுக்கு வழங்கப்பட்டிருக் கின்ற காட்சியினை நாம் காணுகின்றோம். கடந்த 20 ஆண்டு காலத்திலே,ஆயிரக்கணக்கானவர்களுக்குத்தான் பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த 5 ஆ ண்டு காலத்தில் லட்சக் கணக்கானவர்களுக்குப் பட்டாக்களை வழங்கிய சிறப்பு திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு உண்டு. ஒரு நாட்டினுடைய தேவை, அதுவும் சுதந்திரம் பெற்ற, வெள்ளி விழா கொண்டாடி இருக்கின்ற இந்தியப் பெரு நாட் டினுடைய தேவை என்ன என்பதை நாம் புரிந்துக் கொண் டாக வேண்டும்! பொதுவாக ஒரு நாட்டிலே இருக்கிற ஒரு குடிமகனுக்கு அத்தியாவசியத் தேவைகள் உணவு, உடை, இருக்கின்ற இடம், குடிக்க நல்ல பாதுகாக்கப்பட்ட தண்ணீர்! வைகளுக்கான கவலைகள் எல்லாம் இன்றைக்குத்தான் நம் முடைய உள்ளங்களிலே பாய்ந் து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம். வ்வொ வாரு துறையிலே இருக்கின்ற அமைச்சர்களும், இந் ந்த அரசாங்கத்தினுடைய அதிகாரிகளும், இந்த அரசாங்கத்தி னுடைய கொள்கையைத் தெளிவாகப் தெளிவாகப் புரிந்து வைத்துக் கொண்டு, அந்த லட்சியம் என்ன? யாருக்காக இந்த அரசு அமைந்தது? யாரால் அமைந்தது? யாரால் நடத்தப்படுகிறது? ஏழைகளால், ஏழைகளுக்காக அமைந்த அரசு! ஏழைகளால் நடத்தப்படுகின்ற அரசு! அப்படிப்பட்ட அரசினுடைய கொள் கைகளைத் தீவிரமாக, வெற்றிகரமாக ஆக்குவதற்கு அனைவரும் த்துழைக்கிறார்கள். பொது மக்களும் ஒத்துழைக்கிறீர்கள். அதிகாரிகளும் ஒத்துழைக்கிறார்கள். மருத்துவத்துறை நண் பர்களும் ஒத்துழைக்கிறார்கள். அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்டு [வேலூரில் ஒரே மேடையில் 1972-ஆம் செப்டம்பர் 25-ல் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம் நிறைவு விழா, பட்டா வழங்கு விழா, குடும்பநல முனைப்பு இயக்க விழா ஆகியவற்றின்போது ஆற்றிய உரை]