பக்கம்:பிள்ளை வரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 újr?: a17ú தாய்மையழகை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை உணராத குருடகிைவிட்டான் அவளுல் இந்த மாறுதலைத் தாங்க முடியவில்லை. "என்ன! கடவுள் படைத்த அழகு இவ்வளவு தான? அழிவதுதாகு? இத்தனே பேரழ்ன்கiம் நிலைத் திருக்கச் செய்ய அவரால் முடியாதா? இன்னும் சிறிது காலத்தில் எல்லாம் சூனியமாகி விடுவதா? சே சே! அதை என்னுல் பொறுக்க முடியாது’ என்று கூறி முருகன் நெட்டுயிர்த்தான். ஒரு வேதனைக் குரல் அவனே அறியாமல் வெளிப்பட்டது. முருகனுக்கு அமைதி வரவில்லை! அன்று முழு வதும் அறைக்குள்ளேயே ஊசலாடிக்கொண்டிருந் தான். மாலை நேரம், அன்று என்றும் இல்லாத வனப் புடன் தோன்றியது: தெய்வயானை முருகனை அழைத் தாள். வெளியே வந்து பாருங்கள்; அந்தி வேளே என்ன அற்புதமாக இருக்கிறது! இதை ஒரு நல்ல காட்சியாகத் தீட்டலாம்” என்ருள். முருகன் தலையை வெளியே நீட்டினன். 'இதுதானே? இதுவும் இன்னும் சிறிது நேரத்தில் அழியப்போகிறது! இந்த அழகு யாருக்கு வேண்டும்? இவ்வளவுதான் இறைவ னுடைய படைப்புப் பெருமை!’ என்று சொல்வி விட்டு அவன் மறைந்துவிட்டான்; அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. முருகன் பைத்தியம் பிடித்தவன்போல் ஆகி விட்டான். அகிலாண்டங்களையும் அவற்றிலுள்ள அனைத்தையும் ஆக்கியவனைச் சபிக்கலானன். அழி யாத அழகைப் படைக்க முடியாத கடவுள் என்ன கடவுள் தெய்வயானையின் பேரெழிலும் மாய்வதா? சீ, இந்தக் கடவுளுக்குக் கொஞ்சமும் திறமை யில்லையே! சீதையின் அழகைக் கண்டு மயங்கிய ராவணன்-தன் குலத்தோடு மாண்டான்; ஆளுல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/11&oldid=825006" இலிருந்து மீள்விக்கப்பட்டது