பக்கம்:பிள்ளை வரம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பிள்ளை வரம் "உங்களுக்கு ஏதாவது காதலின் போக்குத் தெரிந்திருந்தால் அப்படிச் சொல்லுவீர்களா? நான் சொன்னதெல்லாம் உண்மையென்று எப்படி நீங்கள் நினைக்கலாம்” இந்தக் கேள்விக்கு என்னுல் பதில் சொல்ல முடியவில்.ை அவரைப் பிரித்து ஒரு நொடிகூடதான். உயிருடன் இருக்கமாட்டேன். நானும் அவரோ டேயே இந்தக் கடலில் விழுந்து விடுகிறேன். அவர் இல்லாமல் எனக்கு இந்த வாழ்க்கை எதற்கு?’ என்று அவள் எழுத்தாள். நான் சமாதானப்படுத்த முயன்றேன். அந்தச் சமயத்தில் நான் சாய்ந்துகொண்டிருந்த தோணிக் குள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. சரோஜா.கண்மணி,விழுந்துவிடாதே, இதோ நான் இருக்கிறேன்' என்ற் கூவிக்கொண்டே விசுவ நாதன் குதித்தான். 'ஆ இருக்கிறீர்களா? உங்கள் விருப்பம் போலவே கல்யாணத்தை இந்த மாசமே வைத்துக் கொள்ளுவோம்” என்ருள் சரோஜா. "சரோஜா, என்ன வேலை செய்யத் துணிந்தாய்? நீ கடலில் விழுந்திருந்தால்...' "நீங்கள் விழுந்து விட்டதாக நினைத்தே நானும்.” x "ஐயோ, இனிமேல் நான் சொல்லுகிறே னென்று நீ அப்படிச் செய்துவிடாதே.” "நீங்கள் இனிமேல் அப்படிச் சொல்லவே கூடாது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/162&oldid=825082" இலிருந்து மீள்விக்கப்பட்டது