பக்கம்:பிள்ளை வரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக் கலை, $ குடித்துவிட்டுப் பிறகு அதைநினக்இறதே இல்லை." என்று இம்மாதிரி அவன் மனத்தில் நினைப்போடியது களேப்பாறவோ என்னவோ அவன் தந்தைக்குள் நுழையாமல் கள்ளுக்கடைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு வேப்ப மரத்து நிழலில் உட்க்ார்ந்தான். கந்தப்பன் மறுபடியும் கள்ளைப்பற்றி நினைத் தான்; விட்டது முதல் அதன் மேலேயே ஒரே பைத்தியமாக இருக்கிறது. இன்றைக்கு ஒரு நாள்" குடிப்பதால் என்ன முழுகிவிடும்? நான் முன்னைப் போல் தினமுமா குடிக்கப் போகிறேன்? இந்த ஆசையைத் தீர்த்துக்கொள்ள இன்றைக்கு மாத் திரம். மறுபடியும் இதைத் தொடுவதே இல்லை. மறுபடியும் கடையைத் திறந்திருக்கிருர்களே. தடவை குடித்தால் என்ன கெட்டுப் போகும்? புதுக் கடையைக் கண்டது முதல் அதே நினைவாக இருக்கிறது. இன்றைக்கு மாத்திரம் குடித்துப் பார்த்துவிட்டு மறுபடியும் அதைத் தொடுவதே இல்லை."-"இன்றைக்கு மாத்திரம்; மறுபடியும் கிட்டக் கூடப் போவதில்லை” என்று அவன் மறுபடி யும் உதுதியாகத் தீர்மானிக்கத் தொடங்கின்ை. “ஆகக் கூடி ஒரு நாலணுக் காசு-இந்தப் பைத்தியம் தொலையட்டும்” என்று முணகிக் கொண்டே கந்தப்பன் கடைசியாகக் கடைக்குள் நுழைந்து விட்டான். அன்று அவன் வேலாயியைப் பார்க்கவில்லே. புளித்த கள்ளே வெயில் நேரத்தில் இன்றைக்கு மாத்திரத்தானே என்று நிறையக் குடித்ததஞலும், நெடுநாளாகக் குடிப்பழக்கம் விட்டுப் போனதாலும் அவனுக்குப் போதை மீறிவிட்டது. சந்தை செனறு திரும்பிய வண்டிக்காரன் ஒருவன் அவன் வழியில் தடுமாறுவதைக் கண்டு வண்டியில் தூக்கிப் போட்டு கொண்டு போய் அவன் வீட்டில் விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/56&oldid=825139" இலிருந்து மீள்விக்கப்பட்டது