பக்கம்:பிள்ளை வரம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4 பிள்ளை வரம் தீர்த்துவிட்டால் போகிறது. எப்படியும் தான் வெற்றி பெறத்தான் போகிறேன். ஒரு முறை தவறிவிட்டாலும் மற்ருென்றில் நிச்சயம் கெவித்து விடுவேன். திங்கட் கிழமை நேரமே போய்ப் பணத்தைச் சுராஜ்மல்லில் கொடுத்துவிட்டு ரசீதும் வாங்கி வந்துவிடலாம். ஆணுல் இப்பொழுது ஏதா வது ஒரு பேச்சு அவர்களுக்குச் சொல்லிவிட்டு வர வேண்டுமே? சொல்லாமல்" திரும்பி விட்டால் ஒரு சமயம் திங்கட்கிழமையன்று பாங்குக்கு ஆள் அனுப்பி விட்டார்களானல் என்ன செய்வது? இப் பொழுது ಕ್ಷ್ லுக்குச் சென்று, செட்டியார் கணக்குத் தீர்க்கும்படி கொடுத்த பணத்தை வரும் போது எடுத்துவர மறந்துவிட்டேன்; பாங்கியிலேயே என் கைப்பெட்டியில் இருக்கிறது. திங்கட்கிழமை பாங்கு திறந்ததும் கொண்டுவந்து கொடுத்துவிடு கிறேன். என்று சொல்லிவிட்டு வந்துவிடாலாம்' என்று சூழ்ச்சி செய்யலானர். r இது மிகவும் பொருத்தமாகத் தென்பட்டது. இதை யாரும் சந்தேகிக்கவும் முடியாது. மறந்து வந்துவிடுவது இயற்கைதானே? "ஜேப்பில் இருப்ப தாக நினைத்துக்கொண்டே நான் வந்துவிட்டேன். பாங்கியைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு செட்டியாரும் போய்விட்டார். பஸ்ஸில் வரும் போதுதான் பணம் கொண்டுவரவில்லை என்று தெரிந்தது. பிறகு என்ன செய்வது? திங்கட்கிழமை கொண்டுபோய்க் கொடுத்துவிட்டால் போகிறது.இதில் என்ன தவறிருக்கிறது?” { குப்புசாமியின் சூழ்ச்சி நன்ருகவே வேலை செய் தது. அதிலெல்லாம் அவர் தவறிவிடவில்லே.-சுராஜ் மல்லில் அவர் வாத்தையை யாரும் சந்தேகிக்க வில்லை. ஆனல் அடுத்த நாள் குதிரைப் பந்தயத்தில் தான் அவர் கணக்கும் ஆராய்ச்சியும் தவறிவிட்டன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/95&oldid=825182" இலிருந்து மீள்விக்கப்பட்டது