பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

207


என்செய்கோ மற்றிதனுக் கென்றான் இகல்சீறும்
மின்செய்த வேலான் விரைந்து 371

குறையாத கற்பினாள் கொண்டானுக் கல்லால்
இறவாத வேந்திழையாள் இன்று - பறிபீறி
நெல்லிற் பருவரால் ஓடும் - நெடுநாடா
சொல்லப் படுமோவிச் சொல்? 372

என்மேல் எறிகின்ற மாலை எழில்நளன்றன்
தன்மேல் விழுந்ததுகாண் முன்னாளில் - அன்னதற்குக்
காரணந்தான் ஈதன்றோ என்றான் கடாஞ்சொரியும்
வாரணந்தான் அன்னான் மறித்து 373

முன்னை வினையான் முடிந்ததோ மொய்குழலாள்
என்னைத்தான் காண விசைந்ததோ - தன்மரபுக்
கொவ்வாத வார்த்தை யுலகத் துரைப்பட்ட
தெவ்வாறு கொல்லோ விது? 374

காவலனுக் கேவற் கடன்பூண்டேன் மற்றவன்றன்
ஏவல் முடிப்பன் இனியென்று - மாவிற்
குலத்தேரைப் பூட்டினான் கோதையர்தங் கொங்கை
மலர்த்தேன் அளிக்குந்தார் மன் 375

நளன் தேர் ஒட்டுதல்


ஒற்றைத் தனியழித் தேரென்ன ஓடுவதோர்
கொற்ற நெடுந்தேர் கொடுவந்தேன் - மற்றிதற்கே
போந்தேறு கென்றுரைத்தான் பொம்மென் றளிமுரலத்
தீங்தேறல் வாக்குந்தார்ச் சேய்376

முந்தை வினைகுறுக மூவா மயல்கொண்டான்
சிந்தையினுங்கடுகச் சென்றதே - சந்தவிரைத்
தார்குன்றா மெல்லோதி தன்செயலைத் தன்மனத்தே
தேர்கின்றான் ஊர்கின்ற தேர்377