பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

930முருகு சுந்தரம்



நெருடா எல்லாரும் காதல் மன்னர்களே! மாயகோவ்ஸ்கி மட்டும் அதற்கு விதிவிலக்கா?மாயகோவ்ஸ்கியின் வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ பூந்தோட்டங்கள்! குளிர் அருவிகள்! இளமரக்காடுகள்!

மாயகோவ்ஸ்கியின் ‘முதற் காதல்’ அவனது 22ஆம் வயதில் ஒடிசா நகரில் மலர்ந்தது. மேரியா டெனிசோவா என்ற பதினெட்டு வயது அழகியை அவன் சந்தித்துக் காதல் கொண்டான். மெலிந்த உடல்வாகும், நெடியதோற்றமும், ஒளி வீசும் அழகிய கண்களும் வாய்க்கப் பெற்றவள் மேரியா. அவளைச் சந்தித்து, அவள் படத்தை வரைந்ததோடு குறிப்பெழுத்தில் (Cryptogram) தன் காதலையும் வெளிப் படுத்தினான்.

.. V . . O .

I love you

. . n . . o. . r... ic.

.. n. . J. you are nice

d. . rl.. b. e

dear lovable

a.. r. .l k. . s

adorabile kiss

me please

me please

do you love me?

do you love me?

ஆனால் இக்காதல் ஒரு தலைக்காதலாக முடிந்தது. இக்காதல் தோல்வியை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தோல்வி, 'கால் செராய் அணிந்த மேகம் (The cloudin ants) என்ற தலைப்பில் உள்ளம் உருக்கும் ஒரு கவிதையாக உருப் பெற்றது.

மேரியா!
ஒரு கவிஞன்
தன் உள்ளத்தில்
திடீரென்று குதித்தெழுந்த
கவிதைச் சொல் ஒன்றை
மறப்பதற்கு
எப்படி அஞ்சுவானோ
அதுபோல்-
உன் பெயரை மறக்க
நான் அஞ்சுகிறேன்.

மேரியா!
போரில் மிஞ்சிய
தனது ஒற்றைக் காலை
ஒரு போர் வீரன்
எப்படி நேசிப்பானோ
அதுபோல,
உன் பளிங்கு மேனியை
நான் நேசிக்கிறேன்,
ஆனால் ...
நீ என்னை விரும்பவில்லை.