பக்கம்:புகழ் மாலை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழ் மாலை 65

சரியை முதல் சோபானம் நான்காம்; அங்ங்ண்

சார்கின்ற சோபானம் நான்கும் ஏறி - அரியமெய்ஞ் ஞானத்தை அடைந்து விட்டால்

அருள்பெறலாம் என்கின்ற நூல்கள் பார்த்தோம்: தெரியுமவை செய்வதற்கு முடியா தென்ருல் . திருப்புகழ்சேர் அருணைநகர் வந்து சார்மின்; குரு.எனவே ராமசுரத் குமாரன் முன்ல்ை

கூடுமின்: அவனருளால் இன்பம் காண்பீர். - 22 6

பொறியடக்கி ஆசைகளை அறவே விட்டுப்

பொருள்தன்னைச் சேர்க்கின்ற அவாவும். நீங்கி அறிவுபெற்று நிற்கஎன்ருல் அரிய தாகும்; அருளுடையார் தம்பாலே அணுகி நல்ல நெறிநின்று கருணையினைப் பெற்று விட்டால் நிலையுற்ற இன்பத்தைப் பெறலாம் என்று குறிபெறவே சொல்கின்ற பெரிய ஞானி

கோதில்லா ராமசுரத் குமார யோகி. ....227

கல்லாகும் மனமெல்லாம் கனியச் செய்வான். கசடுழந்த நெஞ்சமெல்லாம் தூய வாக்கி மல்லாடும் பொறிகளையே அடக்கு கின்ற

வழிசொல்வான்; ஆசைஎனும் பேயை ஒட்டி நல்லாம்ை படிசெய்வான்; ஞான யோகம்

நாடுகின்ற பெரியார்க்கு நலமும் ஈவான்: ' அல்லாடும் களத்தான்போல் இருக்கின் ருளும்,

அருணை நகர் ராமசுரத் குமார யோகி. 228

இராமன்றன் நாமத்தைப் பரக்கப் பாடி

இசையோடு புகழ்கின்ருன்; உள்ளந் தன்னில்

பராவுகின்ற பரம்பொருளை எண்ணி எண்ணிப் பரந்த உப சாந்தநிலை பெற்று நிற்பான்;

Ls. Lorr.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/72&oldid=1481041" இலிருந்து மீள்விக்கப்பட்டது