பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. வள்ளலின் கேடயம்

விளம்பரப் புகழ்பெற்ற வள்ளல் ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு கேடயமும் இருந்தது.

அந்தக் கேடயம் மிகவும் சிறப்பு உடையது. தனக்கெனத் தனி வரலாறு பெற்றது.

அவ்வாறே வள்ளலுக்கும் தனி மதிப்பும், சிறப்பான வரலாறும் இருந்தன.

வள்ளல் கலைத்துறையில் பணியாற்றி, பெரும் பணம் பண்ணி, ராஜபோகமாக வாழ்ந்து வந்தார். அவருக்கு நல்ல மனம் இருந்தது. ஆகவே, தாராளமாகப் பொருள் உதவி புரிந்து வந்தார். தனிநபர்களுக்கும், சங்கம் சமூகம், நிறுவனம், கட்சிகள் முதலிய பலவற்றுக்கும் அவர் பணம் கொடுத்தார். அவை அவரைப் புகழ்ந்தன. அவரிடம் மேலும் உதவி எதிர்ப் பார்த்தன. அதனால் அவர் கொடுத்துக் கொண்டே இருந்தார். இதனால் என்ன ஆயிற்று? புகழப் படுவதில் மகிழ்ந்து, புகழை எதிர்பார்த்தே அவர் பண உதவி செய்கிறார் என்ற கருத்து பரவலாயிற்று.