உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகை நாட்டின் மீது படையெடுத்துச் செல்வதன் முன் படை போவதற்கு ஏற்ப, பாதை அமைக்கும் பணி நடைபெற்ருக வேண்டும் என்பதை, வடுகர் துணைநிற்கத் தமிழகத்துள் நுழைந்த மோரியர், தம் தேர்ப்படை இனிது செல்வதற்கேற்ப, பாதை வகுத்துக்கொண்டதைக்கூறும்.

வடுகர் முன்னுற, மோரியர் தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு விண்ணுற ஓங்கிய பனி இரும் குன்றத்து ஒண் கதிர்த்திகிரி உருளிய குறைந்த அறை’’

மாகெழுதானே வம்பமோரியர் புனைதேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள்ளருவிய அறை” என்ற மாமூலனாரின் அகனானூற்றுப் பாடல்கள் (281:251) உறுதி செய்வது உணர்க.

வருவதாகக் குறித்துச்சென்ற பருவம் கடந்தும் கணவன் தேர் வராமைகண்டு கண்ணறக்கவும் ஒழிந்து வருந்தும் இளம் மனைவியர்க்கு, இரவில் சிறிதுபோதே கொள்ளும்துயிலிடையே, கணவன் வரக்கண்டதாகக் காணும் சிறிய கனவுக்காட்சி, உயிர்அளிக்கும் இனிய மருந்தாகும் என்ற உண்மையை 'நனவில்ை நல்காதவரைக் கனவினால் காண்டலின் உண்டு என் உயிர்' (குறள் 1213) எனக் குறட்பாதலைவி கூறும் கூற்று, உறுதி செய்வது உணர்க.

99