பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் ©26> கவியரசர் முடியரசண் உழுகின்ற காளைக்கு வைக்கோ லேனும் ஒருசிறிது கிடைத்து விடும்; வாழ்நா ளெல்லாம் உழுதொழிலில் கழிக்கின்றோன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாதென் றுலகஞ் சொல்லும் பழமொழியைக் கேட்டதினிப் போதும் போதும் பாரிலவன் வாழ்வினையும் பெருக்கல் வேண்டும் முழுமையொடு வாழுவழி வகுத்தல் வேண்டும் முயலாது கழித்தலினி வேண்டா வேண்டா கைகட்டி உலகந்தான் உழவன் பின்னே கடுகிவரும் எனவுரைத்தோம் நன்று நன்று; கைகட்டி வாய்பொத்தி உண்மை வாழ்வில் - கால்வளைத்து நிற்பவன்யார்? உழவன் அன்றோ? பொய்கட்டி விடுவதெலாம் போதும் போதும்; புலையனென அவன்வாழ்வைப் பொசுக்கு கின்றோம்; மெய்தொட்டுப் பயிலஇனும் கூசு கின்றோம் மேலென்றுங் கீழென்றும் பேசு கின்றோம். ஏர்தொட்டுத் தொடிப்புழுதி கஃசாச் செய்தே எருவிட்டு நீர்பாய்ச்சிக் காத்து நின்று பார்கெட்டுப் போகாமல் உலகில் எங்கும் பசிப்பிணியை ஒட்டுகிறான் அவன்க முத்தைக் கூர்பட்ட கதிரரிவாள் கொண்டு வெட்டக் கூசுகிலோம்; நெஞ்சுருகப் பார்த்த கண்கள் நீர்சொட்ட அவன் வாழுங் குடிலை யெல்லாம் நெருப்பூட்டி எழும்புகையில் உலவு கின்றோம்.

  • கஃசு = காற்பலம்