பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாவும் பொதுமையடா. கோடி தொகுத்தபினும் மாடி எடுத்தபினும் கூட வருவதொன் றில்லையடா வாடி வதங்கிவிழும் ஏழை எளியவர்க்கு வாழ்வு வழங்குவது நல்லதடா வாழத் துடிப்பவனை நாளும் உழைப்பவனை வாழ்வைச் சுரண்டுவது கொள்ளையடா கோழை எலும்புகளும் கூர்மை யடைந்துவிடின்

  • கோலைத் தடுப்பவரும் இல்லையடா

பாழும் வயிற்றுணவு பஞ்சின் உடுக்கையிவை பாரிற் பிறந்தவர்க்குப் பொதுமையடா ஏழைக் கிவையிரண்டும் இல்லை விதிப்பயனாம் என்று மழுப்புவது மடமையடா தேவை யளவறிந்து யாவும் அடைந்தபினும் தேடி முடக்குவது குற்றமடா யாவும் பொதுமையென நீயும் உணர்ந்துநட யாரும் நமதருமைச் சுற்றமடா कालखकळः அம்பு) -