பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

புதியதோர் உலகு செய்வோம்



19. அவல் இடிக்கும் ஆயுதம்

தமிழக ஆட்சி அரசியலில், மக்கள் அடியோடு மறக்கப்படும் அளவுக்கு, தலைபோகும் பிரச்சினைகள் அலையலையாக எழும்பிக் கொண்டிருக்கின்றன. கருவூலம் - கஜானா காலி என்று பானையைக் கவிழ்த்துக்காட்டும் நிலையில் அரசாட்சி சொல்லியும் சொல்லாமலும் கை கழுவி விட்டது. ஒரே ஓர் ஆறுதல். வயிற்றை ஈரத் துவாலையால் அழுத்திக் கட்டிக் கொள்ள, வான் கொடையால் நீர் வீழ்ந்திருக்கிறது. ஆனால், நம் தமிழக மக்களுக்கு அந்த ஈரமும் இல்லை என்றாலும், நாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்ற சூடு - சுரணை உறைத் திருக்குமா என்பது ஐயம்தான். ஏனெனில், ஆட்சி பீடங்களைத் தேர்தலில் உறுதி செய்யும் திருமிகு வாக்காளப் பெருமக்கள் தாங்கள் ஒரு பெரிய குடியரசு நாட்டின் தன்மான உணர்வுடைய உறுப்பினர்கள் என்ற உணர்வுடன் செயல்படுவதில்லை. குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் ஆட்சி பீடத்துக்கான தேர்தல் - போட்டி ஆட்டங்களில் வெற்றி தேடித்தரும் கட்சித் தொண்டர் மந்தைகளாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். தங்கள் தலைவர்களுக்குக் கொசுக்கடி, புழுக்கடி, இருமல் என்ற துன்பங்கள் நேர்ந்தால்கூட ஊரைக் கொளுத்தவோ, ஏழைப் பெண்ணுக்கு அடுப்பெரிக்கக் கிடைத்த மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்துத் தியாகம் செய்யவோ தயங்குவதில்லை.

இந்த ‘சுதந்திரச் சூழ'லில் பெண்கள், தங்கள் எல்லைகளை நிர்ணயிக்கும் இலட்சுமண ரேகைகளைத் தாண்டி, கல்வி, பொருளாதார சுயச்சார்பு என்ற