பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீரூபித்து வருகிறாள். விண்கலம் செலுத்தி ஒரு கல்பனா சாவ்லா இந்தியப் பெண்ணின் பேராற்றலை நிலை நிறுத்தியிருக்கிறாள். கலைகள், பண்பாடு, இலக்கியம், தொழில் நுட்பம், மருத்துவம், பொறியியல், என்று ஒரு துறைகூட அவள் பங்கு பெறாத இடமாக இல்லை. என்றாலும் ஆணாதிக்க மரபுகள் பெண்களின் ஆளுமையையே இன்னமும் மலரவிடாமல் செய்திருக்கின்றன. சமூகப் பொருளாதாரம், சமத்துவம் இல்லாத நிலைகளில் அவளுக்கு வறுமையையே வழங்கி அவள் முன்னேற்றத்தைக் கிடுக்கிப்பிடிக்குள் வைத்திருக்கிறது. அடித்தளத்திலும், அவள் பேராற்றலை விளக்கப் போராடிச் சமாளிக்கிறாள். ஆட்டோ, பேருந்து என்று ஓட்டுகிறாள். கட்டுமானத்தளங்களிலும், கடினமான உடலுழைப்பை நல்குகிறாள். குடும்பப் பொறுப்புடன் நவீனமான அழுத்தங்களுக்கும் அவள் ஈடுகொடுக்கிறாள்.

இத்தனை ஆற்றல்களும் அவள் இருத்தலுக்குப் போராடும் அவலத்தில் விடிவதை யாரே ஏற்றுக்கொள்வர்?

இயல்பான வாழ்வளிக்கும் திருமணமும் தாய்மையும் கூட வரதட்சணை பூதத்தை வென்று, குடும்பக்கட்டுப்பாட்டு நிர்ப்பந்தங்களை ஏற்கும் அழுத்தங்களைச் சுமந்து தான் அமைகிறது. அவள் அறிவு சார் முன்னேற்றப் பாதையில் அடிவைக்கிறாள், பாரம் சுமந்துமே. இந்நிலையில் பெண்களுக்கு ஆட்சி மன்ற ஒதுக்கீடு, சமத்துவ உரிமை என்றெல்லாம் ‘ஆதிக்க மரபுகள்’ விட்டுக் கொடுக்கவேண்டி இருக்கிறது. கிடைத்த இடத்தைப் பற்றிக் கொள்வோம் என்று, எழுத்தறிவு அற்ற பெண்ணும் பஞ்சாயத்துத் தேர்தல்களில் வெற்றி பெற்று, மூச்சுக்கு முக்குளிக்கிறாள். சுயநிதிக் குழுக்கள் புதிய வரலாற்றை எழுதுகின்றன. கிராமப் பெண்கள், விவசாயம் அது சார்ந்த