உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய ஆத்திசூடி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அச்சந் தவிர்.
ஆண்மை தவறேல்.
இளைத்த லிகழ்ச்சி.
ஈகை திறன.
உடலினை உறுதிசெய்.
ஊண்மிக விரும்பு.
எண்ணுவ துயர்வு.
ஏறுபோல் நட•
ஐம்பொறி ஆட்சிகொள்.
ஒற்றுமை வலிமையாம்.
ஓய்த லொழி.
ஔடதங் குறை.
கற்ற தொழுகு.
கால மழியேல்.
கிளைபல தாங்கேல்.