84 கல்வியின் துறையுடன் இதன் அமைப்பிலேயும் அக்கறை காட்டி உழைத்து வருகின்றமை போற்றற்குரியது. எனினும் தமிழ்நாட்டு அரசாங்கம் அதற்கெனத் திட்ட மான வரையரைகளைச் செய்து முடிக்கவில்லை. விரைவில் செயல்பட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. - இந்திய நாட்டில் இன்றைய நிலையில் பல மாநிலங்கள் இத் திட்டத்தை இன்னும் செயல்படுத்த முனையவில்லை. நாட்டில் மாநிலங்கள், மத்திய அரசுக்குட்பட்ட எல்லைகள் ஆகியவை 30 உள்ளன. அவற்றுள் முதல் பத்தாண்டுத் திட்டம் 17 இடங்களிலேயே உள்ளன. ஆந்திரம், கரு. நாடகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களும் மராட் டியமும், அசாம், குஜராத், வங்காளம் போன்ற வட மாநிலங்களும், ஜம்மு காஷ்மீரமும் 10 ஆண்டுக் கல்வியைச் செயல் முறையில் முன்பே கொண்டு வந்ததோடு, அடுத்த இடைநிலைக்கான இரண்டாண்டுக் கல்வியினையும் வரை யறுத்துள்ளன. எனினும் அவை அனைத்திந்திய எல்லையில் - அமைப்பில் இயங்க வில்லையாதலின் பலப்பல குறை. பாடுகள் உடையனவாக உள்ளன. மராட்டிய மாநிலத்தில் குற்றங்கள் சுட்டிக் காட்டப்பெறுகின்றன. இதற்கெல்லாம் மத்திய அரசாங்கம் உடனடியான தீர்வு காண வேண்டியது. கடமையாகும். தில்லி உயர் பள்ளி கல்விக் குழுவின் தலைவர் அவர்கள் அவ்வப்போது தாம் செய்ய இருக்கும் மாற். றங்கள் பற்றிப் பத்திரிகைகளுக்குச் செய்தி விடுத்து வரு, கிருர். தில்லி உட்பட அதன் கீழ் இயக்கும் காட்டில் உள்ள சுமார் ஆயிரம் பள்ளிகளிலும் 10 வகுப்பு வரை வரையறுக்கும் திட்டம் சென்ற ஆண்டிலேயே அமுலுக்கு வந்து விட்டது. 1977-ல் அப்பள்ளிகள் 10:ம் வகுப்பினே முடிக்கின்றன. எனவே 1977-குலேயில் இடைநிலை வகுப் புக்கள் உருவாகி வளர ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/104
தோற்றம்