102 உயர்த்தல் வேண்டும். தக்க தகுதி வாய்ந்தவரை இந்த நிலையில், அவரவர் செயல் திறன், செம்மை முறை. பிற இயல்புகள் அடிப்படையில் உயர்த்த வாய்ப்பு இருப்பின் அவர்தம் செயலும் செம்மையும் சிறக்க வழி உண்டாகும். தக்கவர் செயலர் பதவி வரையிலும் கூட உயர்த்தப் பெற லாம் தகுதி உள்ளவர்கள் தங்களை மேலும் தகுதி உள்ளவர் களாக்கிக் கொள்ள எத்தனையோ வகையான தேர்வு முறைகள் இன்று நாட்டில் உருவாகின்றன. இந்த அடிப்படையிலே இரண்டாண்டு இடைகிலேக் கல்வி அமைதல் வேண்டும். இவ்வாறு அமையின் காட் டின் கல்வித்துறையில் பெரும் மாறுதல் ஏற்படும் என்பது உறுதி. 'ஏதோ அரசாங்க மானியம் இருக்கிறது. வேலேயும் இல்லை; நகர வாழ்க்கையின் இன்பம் வேறு; எனவே சென்னை போன்ற நகரங்களில் சில ஆண்டுகள் நல்ல உணவுண்டு காலம் கழிப்போம் என எண்ணிப் பட்டம் பயில்வார் தொகை கட்டாயம் குறையும். இன்று பயில்வாருள் பாதிக்குமேல் தேர்வு பெருமலே போவதையும் காண்கிருேம். இந்த அவல கிலேயும் உண் டாகாது. பல கல்லூரிகள் தேவையற்றனவாகும். இவ்வாறு இத்துறையில் வீணுகும் கோடிக்கணக்கான பணம் வேறு தொழில் துறையில் வருவோரை ஊக்கும் வகையில் கடனுகவோ மானியமாகவோ கொடுக்கப் பயன்படுமே. பட்டம் பெற்றும் பரதவிக்குருேமே என்ற அவலக் குரலும் இல்லையாகும்; பெரும்பாலும் அரசாங்க உத்தி யோகத்துக்கு ஏற்ற படிப்பினை இந்த இரண்டு ஆண்டு. களில் பயின்று உண்மையில் பொதுமக்கள் தொண்டராக (Public Servants) பணியாற்றும் பொறுப்பில் சிறக்க நிற்பர். மருத்துவம் முதலிய தனிப் படிப்பினைப் பயிலு பவர் அந்தந்தத் துறைக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றுச் சிறக்கப் பயில வாய்ப்பும் உண்டு. இாண்டாண்டுகளில்
பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/122
தோற்றம்