104 அறிவியல், தொழில், பணி ஆகியவை பற்றிய கல்வியில் திறன்பெற வாய்ப்பினை அளிக்க வேண்டும். சாதி அடிப் படையிலோ அன்றி வேறு குறுகிய மனப்பான்மை அடிப் படையிலோ என்று இல்லாமல், இத்தகைய வாய்ப்பினே எல்லோருக்கும் அளிக்கும் வகையில் இவை அமைய வேண்டும். அவரவர் விரும்பும் தொழிலையோ, பிற வகைக் கல்வியையோ தேர்ந்தெடுத்து, அவ்வவற்றில் அவர்கள் வெற்றி பெற வாய்ப்பு அளிப்பதோடு, பின் தொடர்ந்து அவரவர் கல்வி அல்லது செயல்முறை அல்லது பணி பெறும் வகைக்கும் அரசாங்கம் வழிசெய்ய வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் தரமுடியும் என்பது இயலாது; எனினும் தகுதியும் திறனும் வாய்ந்தவர்கள், இந்த வகையில் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பார்களா தலின் அவர்களே மேல் படிப்புக்கோ பணிக்கோ தேர்க் தெடுத்துக் கொள்ளலாம். எண்ணிக்கை அதிகமாயின் தேறிய அனைவருக்ரும் இடம் என்றில்லாமல் அங்கேயும் தேர்வு முறைகொண்டு சிறந்தவரைத் தேர்ந்தெடுத்தல் கட்டாயப் படுத்தல் வேண்டும். அப்படியே இந்த இரண் டாண்டு வகுப்பில் சேர்வதற்கும் ஒரு வரையறை வேண்டும். தற்போதுள்ள "S.S.I.C. ல் முதல் முறையிலேயே 350 (அ) 400 பெற்றவர்கள் P. U. C. ல் இடம் கிடைக்காது வாட, வசதியும் சிபார்சும் உள்ளவர் தம் பிள்ளைகளுக்கு ஐந்தாவது முறையில் 220 பெற்ற போதிலும் இடம்பெறும் கொடுமை இனி நாட்டில் இல்லையாகச் செய்ய வேண்டும். பத்தாம் வகுப்பிலிருந்து இந்த இடைநிலைக்கு வருபவர்களுக்கும் இந்த கிலே வரையறுக்கப் பெறல் வேண்டும். மருத்துவக் கல்லூரிக்கோ, பிற பொறியியல் போன்றவற்றிற்கோ இந்த முறை இருப்பதறிவோம். எனவே இடைநிலை வகுப்பில் இடம்பெறும் மாணவர் பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் முறை வெற்றி பெற்றவராகவும் நூற்றுக்கு
பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/124
தோற்றம்