பக்கம்:புதிய கோணம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் கண்ட கனவு 171

நற்றவஞ் செய்வார்க் கிடம், தவஞ் செய்வார்க்கு

மஃதிடம்’ (சிந்தா 77)

என்று கூறினார். எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டித் தவம் மேற்கொள்கிறவர்களுங்கூட அந்நாட்டில் தங்கித் தவஞ்செய்வதால் தவறு இல்லை என நினைப்பார்கள் ஆயின் அந்நாட்டில் வாழும் மக்களுக்கு அதனைவிடச் சிறந்த சிறப்பு ஒன்றைக் கூற முடியாது.

இனித் தேவர் கண்ட கனவு நாட்டின் அரசியல் பற்றி ஒரு சிறிது காணல்வேண்டும். ஏமாங்கத நாட்டை ஆட்சி செய்பவன் சச்சந்தன் என்னும் அரசன். பரம்பரையாக அரசு கட்டிலுக்கு உரிமை உடையவன்தான். என்றாலும் தான் அரசனாக இருக்கின்ற காரணத்தால் ஏனைய மக்களை ஆட்டுமந்தை என்று நினைப்பவன் அல்லன் அவன். தேவர் காப்பியஞ் செய்த காலத்தில் முடியாட்சிதான் இங்கு நிலைத்திருந்தது. ஆனால், மன்னன் மக்களுக்காகத்தான் அரசாள்வதாகக் கருதி ஆட்சி செய்தான். யான் உயிர் என்பது அறிகை, வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே’ என்ற கருத்தை நன்கு அறிந்திருந்த இம்மன்னன் உலகைக்காக்கும் உயிராக யான் இருக்கிறேன் என்றே ஆட்சி செலுத்தினான். ஆட்சி செய்யும் மன்னர்கள் இத்தகைய மனநிலை உடையவர்களாக இருத்தல் வேண்டும் என்று தமிழ்ப் புலவர்கள் என்றுமே கூறி வந்துள்ளனர். எனவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/179&oldid=659887" இலிருந்து மீள்விக்கப்பட்டது