பக்கம்:புதிய தமிழகம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புதிய தமிழகம்


வட எல்லை


அடுத்த ஆண்டு புதிய தமிழகம் உருவாகிச் செய லாற்ற விருக்கும் கிலேயில், அப்புதிய தமிழகம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதும், புதிய தமிழகத்தில் செய்ய வேண்டுவன எவை என்பதைக் கூறத் தமிழன் விரும்புதலும் இயல்புதானே முதலில் புதிய தமிழகம் எதனை வட எல்லையாகப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதைக் காய்தல் உவத்தலின்றிக் காண வேண்டும். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என்று கொல்காப்பியர் காலத் தில் எழுந்த குரல் கி. பி. 17-ஆம் நூற்றண்டு வரை வேங்கடமே தமிழகத்தின் வட எல்லே என்பதை வலி யுறுத்தி வந்துள்ளது. சங்க இலக்கியங்களும், சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய பல்வர் காலத்து இலக் கியங்களும், கல்வெட்டுக்களும், பின் வந்த சோழர் கால இலக்கியங்களும், கல்வெட்டுக்களும், அவருக்குப் பின் வந்த விசயநகர வேந்தர் காலத்து இலக்கியங்களும், கல் வெட்டுக்களும் வேங்கடத்தைத் தமிழகத்தின் வடஎல்லே என்றே கூறுகின்றன. இவ்வாறே காளத்தியும் தமி ழகத்தின் வடஎல்லே யாகும். இந்த உண்மையைப் பெரியபுராணத்தைக் கொண்டு தெளியலாம். திருக் காளத்தி, திருவேங்கடம் முதலிய ஊர்களேச் சுற்றியுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/5&oldid=999961" இலிருந்து மீள்விக்கப்பட்டது