பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 5 கண்களை மூடிக்கொண்ட சாமியார் காதுகளிலும், அந்த காதுகள் வழியாக நெஞ்சுக்குள்ளும், எஸ் பி. பாலசுப்பிரமணியம் பாடிய சிவதோததிரப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன அந்தப் பாடல்களின் ஒவ்வொரு வரியும், அவரை மேலே மேலே உயர்த்திக் கொண்டிருந்தது. ஆன்மா உடம்பை விட்டு விலகி, அருகே உள்ள லிங்கத்தைச் சுற்றிச் சுற்றி சுழல்வது போன்ற ஆனந்தப் பரவசம். சவத்தை விட்டு சிவத் திடம் போனது போனற மெய்யானந்தம், தான் வேறு, ஈசன் வேறல்ல என்ற பாசிவ நிலை, சிவதோத்திரப் பாடல்கள் காதுகளில் கச்சிதமாக ஒலித்தன. 'பிரம்ம முராரிஸ் ரார்சித லிங்கம் கிர்மல பாலித சோபித லிங்கம் ஜன்மஜதுக்க வினாஸக லங்கம் ததப்ரண மாமி சதாசிவ லிங்கம்' 'அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்' என்ற வடலூர் வள்ளலாரின் பாடலையும், அருணகிரி நாதரின் நாதவிந்துகலாதி நமோ நமோ என்ற பாடலையும், வானொலியில் கேட்கும் போதெல்லாம், அப்போது சென்னையில் ஒரு அரசாங்க அலுவலகத்தில் கிளார்க்காக இருந்த ராமையா அப்படியே மெய் சிலிர்த்துப் போயிருக்கிறார். சாமியாராய் மாறிய பிறகு இந்த பாடல்களைக் கேட்கப் பல தடவை ஏங்கியுமிருக் கிறார். ஒரு தடவை கோவிலுக்கு வந்த ஒருவரிடம், தன் அபிலாஷையை சிறு குழந்தையைப்போல் தெரியப் படுத்தினார். எங்கேயாவது தன்னை கூட்டிக்கொண்டு போய் இந்தப் பாடல்களை தான் கேட்கும்படி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த பக்தர், சிரித்துக் கொண்டே போனார். ஒரு வாரத்தில், ஒரு டேப் ரிக்கார்டையும், இரண்டு டேப்புக்களையும் கொண்டு வந்து சாமியாரிடம் பயபக்தியோடு கொடுத்