பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:0 சு. சமுத்திரம் அவளை அப்போதுதான் கவனித்த சண்முகம் 'உச்சர் ஒங்களுக்கு வயசு நூறு...' என்றான். சரஸ்வதி குறும்பாகக் கேட்டாள்: ‘'இப்பவா? பிறகா?' 'இப்பன்னுகூட சொல்லலாம். ஏன்னா... ஒங்க குடும்பத்துக்கும், மானேஜர் குடும்பத்துக்கும் இருந்த ஆண்டான்-அடிமை உறவைப் பார்த்தால் ஒங்களுக்கு நூறு வயது வருவது வரைக்கும் அடிமைப் புத்தியில இருந்து மாறமாட்டிங்கன்னு நினைச்சேன். நீங்க என்னடான்னா, ஒரு நொடில மாறிக் காட்டிட்டீங்க. ' அவள் அவனைப் பொய்க் கோபத்துடன் பார்த்தாள். பிறகு அப்பா ஒங்கள திருநெல்வேலியில பார்த்தா ராமே' என்றாள். அப்பா என்ற வார்த்தையை ஒங்க மாமனார்' என்று மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண் டாள் சீனிவாசன் துளைத்து எடுத்தார்: "அப்புறம் சொல்லுடே....மாரியம்மாள மாவட்டக் கல்வி அதிகாரிகிட்ட கூட்டிக்கிட்டுப் போனே... அப்புறம்?’’ 'அவர்கிட்ட நடந்த விஷயத்த விளக்கினேன். மாரியம்மாளை ஒரு கம்ப்ளெயின்ட் எழுதிக் கொடுக்கச் சொன்னார். அதே சமயத்தில், சம்பளப் பட்டியலுல, அவள் கையெழுத்து போட்டிருக்கதுனாலே, மானேஜர், மான நஷ்ட வழக்குப் போட்டால், தான் ஜவாப்புல்லன் லும் எச்சரித்தார் 'ஏதேது, இந்த ஆசாமியே தங்கப்பாண்டிக்கு சொல்லிக் கொடுப்பான் போலுக்கு...' 'அவர் மாரியம்மாளோட மனுவ வாங்கிக்கிட்டார். "ஆவன செய்யுறேன்’னு சொன்னார். இதுக்கெல்லாம் அவங்களை எதிர்பார்க்கப்படாது. கோளாறு நம்மகிட்ட தான் இருக்கு.'