பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சு. சமுத்திரம் மானமுள்ள ஆசிரியர் செய்யுற வேலையா'ன்னு கேட்டார். நான் ரெண்டும் இல்லாதவன் மாதிரி தலை யைக் குனிஞ்சேன். சரிசரி... மொதல்ல சங்கத்துல சேருங்க, எல்லாம் சரியாயிடும்’ என்றார்.' இந்தாங்க... உறுப்பினர் பாரம். பில்லப் பண்ணித தாங்க. சீனிவாசன் சலிப்போடு சொன்னார்: "இந்த சங்கம் கிங்கமுன்னு பேசா தீங்க. எல்லாம் அசிங்கம். நான் முன்னால ஒரு சங்கத்துல இருந்தேன். அதன் முக்கியஸ் தரில் ஒருத்தன், கார் பங்களா வாங்கிட்டானாம். இன்னும் கணக்கே கொடுக்கலியாம்.' 'குழந்தை பிறக்கும்போது, கொடி சுற்றித்தான் பிறக்குது. கொடியை அறுத்துட்டு குழந்தய பிரிக்கலியா? இதுமாதிரிதான், நல்லது செய்யும்போது கெட்டது கூடவே வரும். நல்லதைப் பிரித்து காப்பாத் தாண்டாமா? இந்த பெடரேஷனுக்கு ஒரு திட்டவட்டமான பொருளா தாரக் கொள்கை இருக்கு. பழைய சங்கக் காரியதரிசி, எல்லா ஜாதியையும் மதிச்சவரு. இந்த சங்கத்துக் க ரிய தரிசி, எல்லா ஜாதியையும் மிதிக்கவரு. என்ன யாருமே பாரத்த வாங்க மாட்டே ங்கறீங்க? ஒங்கள யாராலும் காப்பாத்த முடியாது சாமி. கடவுளாலயும் முடியாது. தங்கப்பாண்டி பிறக்கல... நீங்கதான் பிறக்க வச் சிருக்கீங்க.' சரஸ்வதிக்கு, அவன் பேசப் பேச, ஏதோ புயாத ஒன்று, புதிரான மாயையை விலக்கிக்கொண்டு, விஸ்வ ரூபத்துடன் நிற்பதுபோல் தோன்றியது. சண்முகத் தையே, விழியசையாது பார்த்த ோது, சீனிவாசன் மன்றாடினார். "கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். இவன் கிட்ட இருக்கிற பிடியை மொதல்ல எடுத்துக்குவோம். ஆனால் நான் கொடுத்திருக்கிற பிடி, அசல் மரணப் பி.டி.'