பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சு. சமுத்திரம் நாம் அவர்கள நடத்துற விதம் பிடிக்கல ஸார். ஒதுக்கி வச்சிருக்கதுக்கு அவங்களும் உள்ளுர கோபப்பட்டுக்கிட்டு இருக்காங்க. ஊர்ல மொதலாளின்னு" சொல்ற பெரிய மனுஷங்கள சேரில, கெட்ட கெட்ட வார்த்தையில திட்டுறாங்க. நான் இவ்வளவு நாளும், நாம ஒதுக்கி, ஊர்க் கோடியில வைத்திருக்கதை அவங்க தப்பா நினைக்கல்லன்னு நினைச்சிருந்தேன். செல்லாக் கோபம் பொறுமை என்கிறது மாதிரி, சொத்து பத்து இல்லாம, மேல் ஜாதி நிலத்தை நம்பியிருக்கதுனால, அவங்க கட்டாந்தரை மாதிரி பார்க்கதுக்கு தோணுது. ஆனால் உள்ள பூகம்பம் இருக்கு இப்போ நம்ம சேரிகூட மாறிகிட்டு வருது வேணு முன்னா பாரு.ஸ்ாரி, பாருங்க, சாயங்காலமா சேரிக்குப் போய் மாரியம்மாள் மானேஜர் பறமுண் டன்னு சொன்னத டமாரம் போடப் போறேன். மாரி அவங்ககிட்ட சொல்லலியா?’’ 'சொல்லல...இதுவரைக்கும் அங்கே எட்டிப் பார்க் காமல் இருந்துட்டு...அப்புறம் சொல்றது தப்புன்னு நினைச்சாள்.' 'அதுவும் சரிதான்... பாரத்த வாங்குறீங்களா இல்லியா?' பெரும்பாலான ஆசிரியர்கள், பாரங்களை வாங்கிய போது, காரைக் கட்டிடத்தில் இருந்து திடீரென்று தோன்றிய தலைமை ஆசிரியர் தங்கச்சாமி, 'இப்டி மொட்டக் கூட்டம் போட்டா எப்டி? பிரேயர் மணி அடியுங்க' என்றார். சண்முகம், திருப்பிக் கொடுத்தான். 'இது மொட்டக் கூட்டம் இல்ல ஸார், முதல் கூட்டம். எங்கள அதட்டு lங்களே, தங்கப்பாண்டி என்ன தான் மானேஜர் என்றா லும், காலையில் ஒன்பதரை மணியில் இருந்து சாயங்காலம் 4-20 வரைக்கும் ஆசிரியர், ஒங்களோட சபார்டினேட்.