பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 7 சிவமயம்... நிஜமான அசல். இந்த அசலின் நகல்தான் அத்தனையும். முற்றிலும் நகல்படுத்த முடியாதது எதுவோ அதுவே அசலான அசல் அதுவே சர்வாம் ச சிவம்' என்ற தத்துவ முடிவுக்கு வந்தவர், அம்மாக்காரி சொல்லிக் கொடுக்காமலே வீட்டுக்கணக்கை சரியாகப் போட்டுவிட்டு, தாயை புன்னகைத்து நெருங்கும் குழந்தையைப்போல, அவர், மரித்துப்போன குருநாதரின் காவி வேட் டியையே உற்றுப் பார்த்திருக்கிறார். பிறகு, தன்னை அறியாமலே தாரை தாரையாக வந்த கண்ணிரைத் துடைத்துக் கொண்டவர், தானே சிந்தித்து எடுத்த ஒரு தத்துவ முடிவைக் கேட்க அவர் இல்லாமல் போய்விட்டாரே! என்று அழுதுமிருக்கிறார். சாமியாரின் மனதில் லிங்காஷ்ட பாடல்கள் முடிந்து, வள்ளலாரின் பாடலும் வந்து போய், அருணகிரிநாதரின் பாடல், டி.எம். செளந்தரராஜனின் குரவில் ஒலித்துக் கொண்டிருந்தது. 'காதவிந்துக லாதீ நமோ நம வேத மந்ர சொரூபா நமோ நம ஞான பண்டித சாமீ நமோகம r வேத சொரூபனான முருகனை, நெஞ்சில் உருவகப் படுத்தி, அவன் கைகாட்டி அபயம் கொடுப்பதுபோல் உருவகமாக்கி, கண்களில் இருந்து பக்தி மழை பொழியப் பொழிய, பரவசத்துள் பரச்சிததாய், தன் மெய் பொய்யாக, ஞானப்பண்டிதனின் மெய்யோடு கலந்த வராய், தன்னை மறப்பதே தன்னையறிதல் என்ற தத்துவ சூட்சுமத்தல், சாமியார் சுக்கிலமாய் மாறிக்கொண்டிருந்த போது, பாறை வெடித்ததுபோல், பயங்கரமான குரல் ஒன்று கேட்டது. 'ஏய்... ஈஸ்வரா... ஒன்கிட்ட எத்தன நாளாடா கேக்குறேன்? என் நோவக் குணப்படுத்துன்னுகூட கேட்கலே... என்னை அவஸ்தை இல்லாம சாகடின்னு