பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 சு. சமுத்திரம் தங்கப்பாண்டி, தனக்கு முன்னால், ஆசிரிய உருவத் தில், ஒரு பெருந்தீ உருவாகி இருப்பதையும், அந்த தீய்க்கு ஊரே எண்ணெயாகி இருப்பதையும், அந்த தீயை ஊடுருவ முடியாது என்பதையும் புரிந்தவர்போல், நாற்காலியில் உட்கார்ந்தபடி மேஜையில், குப்புறத் தலைவைத்து விழிபிதுங்கப் பார்த்தார். அவர் விரித்துப் போட்டிருந்த கைகள், ஆசிரியர்களின் கால்களை நோக்கி, மேஜை விளிம்பில் தொங்கின. பள்ளிக்கூடத்திற்கு சற்று தொலைவில் உள்ள ஒரு 'தனி' வீட்டில் வசிக்கும் சலவைத் தொழிலாளி ஒருவர், நான்கைந்து முரட்டுத் துணிகளைத் தேய்ப்பதற்காக நிலக்கரியில், கொஞ்சம் சீம எண்ணெய் ஊற்றி நெருப் பிட்டார். நிலக்கரி, கண்ணிர் விடுவதுபோல் புகைந்த போது, அவரும் தன் கண்களைக் கசக்கிக் கொண்டே ஊதினார். கண்ணிராய் கசிந்த நிலக்கரி, இப்போது நெருப்புத் துண்டங்களாய் மாறிவிட்டதால் அவை அணையாது என்பதை அறிந்துகொண்டு அவற்றை ஒட்டு மொத்தமாக எடுத்து, இஸ்திரிப் பெட்டியில் போட்டு விட்டு, வெளியே கேட்ட சத்தத்தின் சாரத்தை அறிய மைதானத்திற்கு விரைந்தார்.