பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 17 யோகமும் இல்லை. எனக்கு வழி காட்டும் ஈஸ்வரன், உனக்கும் காட்டுவான். நான் காத்திருந்தது வீண்போக வில்லை' என்று சொல்லிவிட்டு அவரை ஆலயத்துள் அழைத்துச் சென்றார். ராமையா சிட்சை பெற்ற ஆறு மாதத்திற்குள் பெரிய சாமியார் இறந்துவிட்டார். துரத்து கிராம மக்கள், அவரை விமரிசையாக அடக்கம் செய்ததுடன், சின்னச் சாமியாரையும் மரியாதையுடன் பார்த்தார்கள். இவரும் குருநாதரின் ஒரு ஜோடி காவி ஆடையை குடிசைக் குள்ளேயே வைத்து பூஜித்து அவரது நினைவைப் போக்கிக் கொண்டே, ஈஸ்வர சேவையில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இன்றைக்கு அந்தத் தொழுநோயாளியும், அதற்குப் பிறகு வந்த அந்த நடுத் தர வயது மாதும், அவர் உள்ளத்தை நிலைகுலைய வைத்துவிட்டனர். போதாக் குறைக்கு நான்கு மாதத்திற்கு முன்பு அந்த இடத்திறகு "பிக்னிக்குக்காக வந்த ஒரு கூட்டம், இப்போது அடுக்கடுக் காக பல கூட்டங்களை அழைத்து வருகிறது. தண்ணிரில் குளிக்க தண்ணி'யோடு வருபவர்களும் உண்டு அத்துடன் அருகில் ஒடும் காட்டாற்றை மடக்கி, அணை கட்டுவதற் காக, அரசின் ஆயத்த வேலைகள் நடைபெற்று வரு கின்றன. எஞ்ஜினியர்கள், தொழிலாளர்கள் டெண்ட்" போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். காண்ட்ராக்டர் களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், மலைச்சரிவு களில் குடிசைகள் போட்டுக்கொண்டு முடங்கிக் கிடக் கிறார்கள். எல்லோரும் இந்த அருவியில் குளிக்க வந்து விடுவார்கள். இவர்களைப் பார்த்ததும், சொந்த அனு பவத்தால், மனித சமூகம் மீதே வெறுப்புற்ற சாமியார், ஜனத்திரளைப் பார்த்ததும் குடிசைக்குப் போய்விடுவார். சொந்த அனுபவத்தைத் தின்றுகொண்டோ அல்லது தின்னப்பட்டோ தவித்த சாமியார், அங்கொன்றும் இங் ւ.-2