பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சு. சமுத்திரம் பார்த்த வேல்சாமியும், அவள், தன் காலில் கிள்ளிய தாலோ, அல்லது சாமியாரின் அருட்பார்வை கொடுத்த செல்லக் கிள்ளலிலோ, தன்னையறியாமலே சாமியார் காலில் விழுந்தான். சாமியார், இருவரையும் தூக்கிப் பிடித்து நிமிர்த்திய போது, அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவள் கழுத்தில் எதுவும் இல்லை. சந்தேகத்துடனும், சங்கோஜத்துடனும் கேட்டார். 'குழந்தை... ஒனக்கு... என்ன வேணும்பா?' வேல்சாமி நாணிப்பட்டபடியே பதிலளித்தான். "நான் கட்டிக்கப்போற பொண்ணுங்க." 'பேஷ் சொந்தமா?' "சொந்தமல்ல பந்தம்தான் சாமி... எங்களுக்குத் தெரியாதா, சொந்தத்துக்குப் பந்தமோ பந்தத்துக்கு சொந்தமோ தேவையில்லிங்க. இன்னும் கேட்டால்... அவள் எந்த ஜாதின்னு எனக்கோ நான் எந்த ஜாதின்னு அவளுக்கோ தெரியாது. நான் சொல்றது சாமிக்கு விரசமாப் பட்டால் மன்னிச்சிடணும்.’’ சாமியார், விரசமில்லாமல் சிரித்தபடியே பேசினார். 'மனிதனுக்கு... ஜாதி கூடாது என்கிற ஜாதியைச் சேர்ந்தவன் நான். நீ, சாமியார்னா, வைதிகமுன்னு தப்பா நினைக்கே. அப்படி நீ நினைக்கிறதுலயும் தப் பில்ல. பிராமணர்களும், சைவ வேளாளர்களும் கடை பிடிக்கிற அனுஷ்டானங்களையும், கோவில் வழிபாடு களையும் வைத்து நீ மதத்தை எடைபோடுற... ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ... ஒரு மதவாதியை வைத்து மதத்தை எடை போடக்கூடாது. ஒரு மதத்தை வைத்து மகேஸ்வரனை எடை போடக்கூடாது. சர்வேஸ்வரனுக்கு, ஜாதி கிடையாது. அவன் பிள்ளைகளுக்கு மட்டும் எப்படி ஜாதி வரும்.'