பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 25 சகதியும் நிறைஞ்ச குடிசை. கொசுத்தொல்ல தாங்க முடியல. ஒரு கம்பளி கிடையாது, கட்டிலு கிடையாது. எட்டுமணி நேர வேலைன்னு பேரு, பனிரெண்டு மணி தேர வேல. எங்களுக்கு வேட்டியே போர்வை. கொசுவே தோழன். நோயே உடன்பிறப்பு. பலர் காசநோய்ல கிடக்காங்க. பலர் செத்தே போயிட்டாங்க. எங்க பிள்ளைங்களும் படிக்க வேண்டாமா? பள்ளிக்கூடத்துல, கேசுவல் தொழிலாளி பிள்ளைங்களுடன் கேசுவலா கூட போக முடியாது. எங்களுக்கு எட்டு ரூபாய் கூலி. காணடிராக்டருக்கு எட்டு லட்சம் ரூபாய் லாபம். நாங்க லாபத்துல பங்கு கேட்கல... உழைப்புக்கு ஏத்த கூலி கூட கேட்கல. உயிரு உடம்புல இருக்கக்கூடிய அளவுக்கு வசதி கேட்டோம். இதுக்காக சிதறிக் கிடக்கிற கேசுவல் தொழிலாளிகளை யூனியன் சேர்க்க நினைச்சேன். இது தப்பா சாமி இந்த நிலைமை இங்க மட்டுமில்ல சாமி... நாடு முழுதும் இருக்கு. மூணு வருஷத்துக்கு முன்னாடி மெட்ராஸ்ல ஒரு கம்பெனில மெக்கானிக்காய் இருந்தேன். சர்க்கார் வண்டி எந்த ரோட்லயாவது ரிப்பேர்ல நிற்கும். நான் போய் ரிப்பேர் பார்த்துட்டு வருவேன். எனக்கு ஏழு ரூபாய் கூலி-கம்பெனியில் போடுற நூறு ரூபாய்க்கு. பாத் திங்களா சாமி! இது ஈஸ்வரனுக்கு அடுக்குமா சாமி! அந்த பீடை வேண்டாமுன்னு இங்கே வந்தால்... இதுவும் பெரிய பீடையாய் இருக்கு. கம்பெனி “மஸ்டர் ரோல்'ல என் பேரு இருக்கு. பதினஞ்சு ரூபாய் கொடுத்ததாயும், லீவு எடுத்ததாயும் எழுதுறாங்க. எங் களுக்கும் சட்டம் இருக்காதா? எங்கே இருக்குன்னு தான் தெரியல? லேபர் அதிகாரிங்ககிட்ட கேட்டால் சிரிக்காங்க. சும்மா சொல்லப்படாது... நல்லாவே சிரிக் காங்க.’’ இப்போது அந்தப் பெண்ணே இடைமறித்தாள்.

  • சொம்மா பேசாதய்யா...நீங்களே சொல்லுங்க சாமி! அவ்வளவு பெரிய மனுஷன் காண்டிராக்டரே, இந்த