பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சு. சமுத்திரம் அவனை தலைவனாய் தேர்ந்தெடுத்தோம்...இப்போ தலை யில்லாத முண்டமாய் நிக்கோம்...மூடனாய் இருந்தவங்க, அவனால மனுஷனாகி, இப்போ முண்டமாய் நிக்கோம். இந்தப் பொண்ணு துக்கம் தாங்காமல் தூக்குப் போட்டுக் கிட்டாள். தன்னையே கொன்னுட்டாள்...' இன்னொருவர் இடைமறித்தார்: "தற்கொலைன்னு எப்படிப்பா சொல்ல முடியும்? அந்த மவராசனோட கையாளுங்களே அடிச்சுப் போட் டுட்டு இப்படி செய்திருக்கலாம் இல்லியா...' ‘'எதுக்கும் போலீஸ் வந்தால் தெரிஞ்சுட்டுப் போகுது. யாரும் கயிற்றைத் தொடாதீங்க...' "இவன் ஒருத்தன்...போலீஸ் மட்டும் வந்து என்னத்த கிழிக்கும்! வேல்சாமி விபத்துல சாகலன்னு மனுக் கொடுத்தோம். என்ன ஆச்சு? இன்ஸ்பெக்டர் நம்மையே மிரட்டலியா? அந்தக் கதைதான் இந்தக் கதையும்...' "நம்ம கதை அவலக்கதை தானப்பா...போன வாரம் ஒரு எஸ்டேட்டுக்குள்ள ஒருத்தி தூக்குப் போட்டுச் செத்துட்டதாப் பேச்சு... சப்-இன்ஸ்பெக்டர் எஸ்டேட் முதலாளி அனுப்புன கார்ல வந்து விசாரிச்சாரு...அவருக்கு ஒடுற காரு பெரிசாத் தெரியுமா? நின்னுட்ட ஒடம்பு பெரிசாத் தெரியுமா? இங்கேயும் தற்கொலைன்னு "பஞ்சாயத்து முடிவுபண்ணும்... இதை நாம மறுத்துச் சொன்னால், நமக்கும் லாரி கிடைக்கும்... சரி...ஏதோ தலை எழுத்தோ, காலெழுத்தோ...இனிமேல் ஆகவேண்டி யதைப் பார்க்கலாம். போலீஸ் ரிப்போர்ட் பண்ண ஆள் போயாச்சா?’’ சாமியார் கோவிலுக்குள் போகவில்லை. கையில் வைத்திருந்த மாலையை அந்தப் பிணத்திற்குப் போட் டார். அவள் காலருகே உட்கார்ந்து