பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சு. சமுத்திரம் ஆறு மணி நேரத்திற்குப் பிறகு, போலீஸ்காரர்கள் வந்தார்கள். ஆண்களும் பெண்களுமாக நின்ற கூட் டத்தை அதட்டி அதட்டி எதையோ கேட்டார்கள் ஒரு போலீஸ்காரர், வள்ளியின் கழுத்தில் கிடந்த மாலையை லத்திக்கம்பால் தட்டியபடியே எதையோ கேட்டார். பிறகு சாமியார் இருந்த குடிசையைப் பார்த்தார். இரண்டு போலீஸ் அதிகாரிகள், சாமியாரிடம் வந் கார்கள். அவரோ, அவர்களைப் பார்த்த பிறகும் அசைவற்றவராய் அந்தப் பாராங்கல்லிலேயே உட்கார்ந் திருந்தார். பெரிய போலீஸ் அதிகாரி, அருகே இருந்த குட்டிக் கல்லில் உட்கார்ந்தபடி சாமியாரிடம் எதையோ கேட்கப் போனார். அதற்குள் சாமியாரே முந்திக்கொண்டு நடந்த வற்றை நடந்தவிதத்தில் கூறிமுடித்தார். எல்லாவற்றை யும் கேட்டு முடித்த போலீஸ் அதிகாரி, பிறகு சாவகாச மாக 'சாமி...எனக்கு எப்போ புரமோஷன் வரும்னு சொல்லுங்கோ...' என்றார். அவர் குரலின் தோரணை சாமியாரின் ஜோஸ்யம், அவரை வழக்கில் சாட்சியாக அழைக்காமல் இருப்பதற்கான லஞ்சம்போல் காட்டியது. சாமியார் அவரைப் பார்க்காமலே பதிலளித்தார். "மொதல்ல வேல்சாமி...விபத்துலதான் செத்தானா? இந்தப் பொண்ணு தற்கொலையில்தான் செத்தாளா என் இறதை நியாயமான முறையில விசாரணை நடத்துங்க ஈஸ்வரன் உங்களுக்கு தானா வராத புரமோஷனைக்கூட வாங்கிக் கொடுப்பான்.'" போலிஸ் அதிகாரி தனது சந்தேகத்தையே, சாதுரிய மாக்கினார். சாமி...நீங்க பெரியவங்க...ஒங்களுக்கு நான் சொல்ல வேண்டியதிலலை. இருந்தாலும் சொல்றேன். தப்பா நினைக்கப்படாது. இன்னொரு தடவை இப்படிச்