பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 37 யார்? ஈஸ்வரன். இது அவனுடைய நீதி. எல்லா உயிர் களும் ஈஸ்வர சொரூபங்கள். கொல்வதும் கொல்லப் படுவதும் வெறும் பாவனைகளே. மானைப் புசிக்கும் சிறுத்தையின் நாடி நரம்பெங்கும் அந்த மானின் சதையும் ரத்தமும் ஐக்கியமாகின்றன. இதோ இந்த சிறுத்தை ஒரு நரியை அடிக்கிறதென்றால், அந்தச் செயல் அந்த மான்கறி கொடுத்ததால் ஏற்பட்ட ஊக்கம்தானே. அப்படியானால் மானே நரியை அடிப்பதாக ஏன் பாவிக்கக் கூடாது? ஈஸ்வர சக்தியை எப்படி என்று விவரிக்க முடியுமே தவிர, ஏன் என்று சொல்லமுடியாது. பூமியைவிட கோடிக்கணக் கான மடங்கு பெரிய நட்சத்திரத்தையே ஒரு துகளாகக் காட்டும் அண்டங்களும், அண்ட அடுக்குகளும் கொண்ட பிரபஞ்ச சொரூபனான ஈஸ்வரனை...ஏதோ ஒரு கோளத் தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக மறந்துவிடலாகாது ஈஸ்வரா என்னை மன்னிச்சிடு. மாயையில் இருந்து என்னை மீட் பாய் ஒன் அருள் இருந்தால் அந்தப் பையன் இன்று பால் கொண்டு வர வேண்டும். வராதே என்று தடுக்கப்பட்டவன் வலிய வர வேண்டும்.' சாமியார் பூக்கொய்தார். மாலை தொடுத்தார். சொல்லி வைத்ததுபோல அந்தப் பையனும், பால் கொண்டு வந்தான் சாமியார் நெகிழ்ந்து போனார். ஈஸ்வர கிருபையை நினைத்து நெக்குருகினார். அன்று கோவிலில், வட்டியும் முதலுமாக மணிக்கணக்கில் பிரார்த்தித்தார். அவர், வெளிமனதில் வியாபித்திருந்த வேல்சாமியும், வள்ளியும், இதர முந்திய பிந்திய நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சி களின் மனிதப் பாத்திரங்களும் அடி மனதுள் போய் விட்டன. பூஜை, நாள்தோறும் வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தது. அன்றாடப் பூஜையும், கடுமையான ஆசனப் பயிற்சிகளும், பிரணாயமும், சாமியார் மனக் கப்பலை நங்கூரம் பாய்ச்சின.