பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சு. சமுத்திரம் சதுரக்கல். அந்தக் கல்லின் மேல் விபூதி சிதறிய சிறிய தட்டு. இவைதான் கோவிலாகவும், கோவிலைச் சார்ந்த சொத்துக்களாகவும் உருவமானவை. நடுநிசி வேளை. புல்லில் படர்ந்த பனி, லிங்கவடிவுகளாகத் தோற்றம் காட்டின. குகைக்குக் கிழக்குப் பக்கத்தில் துவார பாலகன் போலிருந்த 'துங்குமூஞ்சி மரம் 'நான் ஒன்றும் தூங்கும் மரமல்ல' என்று சொல்வதுபோல், இரண்டு மூன்று கிளைகள், மூன்று மூன்று கம்புகளாகப் பிரிந்து, முடிந்து, திரிசூலம் போல் தோன்ற, அந்த மரத்தின் இலை தழைகளுக்கு ஊடே உற்றுப்பார்த்தால், ஆகாயம் பல்வேறு ஸ்படிக லிங்கங்களாகத் தெரியும். பிரபஞ்ச வெளியில், லிங்க வடிவுக்கு ஒத்துவராத பகுதிகளை மரத்தின் சின்னஞ்சிறு இலைதழைகள் மறைத்து, ஊனக் கண்ணுக்கு ஞான ஒளி பாய்ச்சிக்கொண்டிருந்தன. குகைக் கோவிலுக்கு எதிர்ப்புறத்திலுள்ள குன்றிற்கு மேலே சஞ்சரித்த மேகம், விஸ்வரூப லிங்கமாகத் தோன்றியது. அரூபத்தில்தான், மனதிற்கேற்ற ரூபங்களைப் படைக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதுபோல, ரூப மற்றவை ரூபங்களாயின. மனமே பிரம்மாகவும், பிரம்மமே மனமாகவும் ஐக்கியப்பட்ட சதாசிவ நிலை நீ சதா...சிவம்...இதனால்தான் நாங்களும் சும்மா இருக் இறோம் என்று உரைப்பதுபோல் காட்டு மிருகங்கள் கூட கண்ணயர்ந்தும், மரங்களில் துயில் கொண்ட பறவைகள்: இறக்கைகளைப் பறக்கும் நிலையில் வைத்துக்கொண்டும் இருந்தன. நீ ஆடுகின்ற அரசன். சுழற்சி வேகத்தின் உச்சகட்டமே-அசைவுகளின் பேரசைவே-தாண்ட வம். பம்பரம் வேகமாகச் சுற்றும்போது, அது நிற்பதுபோல் தோன்றுவது மாதிரி, உன் இயக்க வேகத்தால் ஏற்படும் ஸ்தம்பன மாயையை, இந்த பறவைகளும் மிருகங்களும் கம்மா இருத்தல்' என்று தவறாகப் புரிந்திருக்கின்றன. ஆனால் நான் அப்படி இல்லை. என் வேலை உன்னைப்