பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 75 பள்ளிக்கூடத்தில், மொத்தம் பதினாறு ஆசிரியர்கள்; பிள்ளைகள் வருகைப் பதிவேட்டின்படி முன்னுாற்றுக்கு மேலே. வருவதோ...வேண்டாம். வெளியில் சொல்லப் • التي f7 سسا لس தலைமை ஆசிரியர் தங்கச்சாமிக்கு, அன்று கடுமை யான கோபம். மானேஜர் சொல்படி, வெற்றிலைக் கட்டை வாங்கி வந்த அவசரத்தில் சாப்பாடு கொண்டுவர மறந்து விட்டார். தங்கப்பாண்டி வீட்டில் பலகாரங்கள் தின்னப்பட்டபோது, இவர், பள்ளிக்கு ஒரு காரியமாக ஓடிவந்துவிட் டு, வந்த வேகத்துலேயே தி ரு ம் பி ப் போனார் . எல்லாவற்றையும் தின்றுவிட்டு, பத்தாதது போல், அவரையே தின்பவர்கள்போல், பிரமுகர்கள் அவரைப் பார்த்தார்கள். ஆகையால் 'நன்றி ஒருவர்க்குதெரியாதவங்கெல்லாம் எழுந்திருங்கடா என்றார், கையில் பிரம்பைத் தயாராக வைத்துக் கொண்டு. மானேஜர் மகனோடு, மொத்தம் பத்துப்பேர் கம்பீரமாக எழுந்தார்கள்! தங்கசாமி தலையை தாழ்த்திக்கொண்டு பிரம்பை மேஜையில் வைத்தார். ஒருவனால் ஒன்பது பேருக்கு லாபம்! ஆறாவது 'பீரியட்' முடிந்து ஏழாவது பீரியட் துவங்கியது. சில வகுப்புகளுக்கு விளையாட்டு 'பீரியட். ஒரு சில ஆசிரிய-ஆசிரியைகள் மைதானத்தில் பிள்ளை களை மேய்த்துக்கொண்டே, .ே ப. சி. க் .ெ கா எண் டு நின்றார்கள். தங்கப்பாண்டி வீட்டில், கோதுமை ரவையும், பஜ்ஜி யும் செய்த ஆசிரியை பார்வதி, மாரியம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டே கேட்டாள்: ‘'என்ன மாரி, நாளையோட ஒன்னோட வீல் வேகன்ஸி முடியப் போவுதே, என்ன செய்யப்போறே?' 'அதுதான் எனக்குத் தெரியல...'