பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 77 நின்றார். வேலாயுதம் மட்டும் மாரியம்மாளை ஒரு தினுசாக’ப் பார்த்தான். இதற்குள் பொன்னையா மகள் சரஸ்வதியும் அங்கே வந்துவிட்டாள். அவள் இடுப்பு நனைந்திருந்தது. ஆடையை பிழிந்துவிட்டுக் கொண் L. }TᎶᎻ . "என்னம்மா, மா ேன ஜ் .ெ ம ன் ட் யாருக்குப் போச்சுது? 'தங்கப்பாண்டி மாமாவுக்குத் தான். ஏலத்துல எடுத்தாரு முப்பதாயிரம் ரூபாய் ஏலம். சீ...நினைச்சிப் பார்க்கவே கேவலமா இருக்கு. ஏலம் போட்டாலும் பள்ளிக்கூடத்தயா ஏலம் போடுறது?’’ 'இதவிட இவனுவ பொண்டாட்டிவள ஏலம் போடலாம் 'அதுக்குத் தான் நம்ம இந்திரா இருக்காளே! முப்ப தாயிரத்துக்கு ஏலத்துல எடுத்தவன், நம்மள எப்படில்லாம் ஏலம் போடப்போறானோ? இன்னைக்கு சம்பளம் தரப்போறானோ இல்லியோ? அடேயப்பா முப்பதாயிரம ரூபாய்க்கா போச்சுது' சரஸ்வதி, தான் கண்டுபிடித்ததைச் சொன்னாள். தங்கப்பாண்டி மாமா கவலப்படுறது மாதுரி தெரியல...' கனகம், அதன் காரணத்தை விளக்கினாள். அவன் ஊரு தாலிய அறுக்கிறவன்; அவன் ஏன் கவலப்படினும்? நாமல்லா கவலப்படனும் இருநூறு பிள்ளிங்களுக்கு பகலுணவு போட றதா பேப்பர்ல காட்டுறான் கொடுக்கிற கோதுமையையும், எண்ணெயையும் வழி யிலயே வித்துப்புடறான். நம்ம சம்பளத்துல வேற கமிஷன் பிடிக்கான். மொத்தத்துல, ஏலத்துல எடுத்தவன் அவன்; கொடுக்கப் போறது நாம்,'