பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சு. சமுத்திரம் 'புரியும்படியாச் சொல்லு.' 'அதாவது, முதல் வேலய ஹரிஜனத்துக்குக் கொடுக் கணுமுன்னு சட்டம் சொல்லுது. இதுக்காக என்ன பண்ணுறோம் தெரியுமா? யாரையாவது ஒரு ஆசிரியரை ரெண்டுமாசம் லீவுல போகச் சொல்லுறது. இருபத்தோறு நாளைக்கு மேல ஒருத்தர் வீவுல போனாலே, இன்னொரு வாத்தியார போடலாமுன்னு ரூல் இருக்கு. லிவுல போற. வாத்தியாருக்குப் பதிலா ஹரிஜன வாத்தியாரப் போடு வோம். லீவுல போன வாத்தியார் டுட்டில சேர்ந்ததும் ஒரு ஹரிஜன ஆசாமியோட வேல ரத்தாயிடும். அப்புறம் யாருக்காவது கல்யாணம் நடந்தோ இல் ல கருமாந்திரம் நடந்தோ ஒரு வேகன்ஸி வருதுன்னு வச்சுக்குவோம், அதுல பிற்படுத்தப்பட்ட ஜாதில இருந்து ஒருவர போட்டு டலாம். இப்ப எல்லாருமே இப்பிடி வீவ் வேகன்ளtல ஹரிஜன போட்டுட்டு, பெர்மனன்ட் வேகன்ஸில, வேண்டிய ஆளப் போடுறாங்க. கவர்மெண்ட் எங்கள ஒண்ணும் ஆட்ட முடியாது. சர்க்காருக்கும் இது தெரியும். அவங்க அடிக்கது மாதிரி அடிக்கிறாங்க... நாங்க அழுகிறது மாதிரி அழுகிறோம்... அவ்வளவுதான்.' கந்தசாமிக் கிழவர் கிட்டத்தட்ட எம்பி எம்பிக் குதித்துப் பேசினார். 'தங்கப்பாண்டி... நீ எலெக்ஷன்ல நிற்க வேண்டிய ஆளுப்பா. இந்த பரட்டத்தலைக்குள்ள எவ்வளவு பெரிய மூளப்பா? நான் சரியான கூமுட்டை... இது தெரியாம ஒன்னத் தப்பா நினைச்சுட்டேன். சரி... இந்தப் பறப்பய மவளுக்கு வேல எப்ப முடியுது?’’ 'இன்னையோட சரி.' 'அப்போ நம்ம பயலுக்கு?’’ "கொஞ்சம் பொறும். இந்த சரஸ்வதிப் பொண் னுக்கு ஒரு மாப்பிள்ள பார்த்திருக்கேன். மாப்பிள்ளைக்கி செங்கல்பட்டு ஜில்லாவுல வேலை. அநேகமாக குதிரும் .