பக்கம்:புதிய பார்வை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூகப் பார்வை

நிறையாத மனம்

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் இரண்டு பிரிவுகள். வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை வாழ்வ தற்கு ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் வாழ்க்கை. இவற். றில் இரண்டாவது பிரிவு மிகவும் அந்தரங்கமானது. அன்றி யும் மனிதனுடைய கினேவை அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது, வாழ்ந்து கொண்டிருப்பதைவிட வாழ வேண்டியதற்கு ஆசைப்படுவது அதிகம் என்பதை அந்த ரங்கமாக வைத்துக் கொண்டாலும் மனித இயல்பை ஒட்டி அதை நாம் புரிந்து கொள்ள முடியும். பொதுவாக நடுத் தரக் குடும்பத்து மனிதர்களில் நூற்றுக்குத் தொண்ணுாறு பேர் வாழ்ந்து கொண்டிருக்கிற கிகழ்காலச் சூழ்கிலேயை முற்றிலும் கிறைவாக கம்பிவிடாமல் வாழ ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிற சூழ்கிலேயை எதிர்பார்த்தே வாழ். கிருர்கள். -

வசதிகளோடு கட்டுப்பாடும், திட்டமும் உள்ள ஒழுங் கான வாழ்க்கையை இன்று வரை ஏதேதோ காரணங் களால்தான் வாழ முடியாமல் போய்விட்டது போலவும், இனிமேல்தான் அந்த வளமான வாழ்க்கையை அதுபவிக் கும் சுகமான நாட்கள் தன்னுடைய வாழ்க்கையில் நேர வேண்டும் போலவும் ஒவ்வொரு மனத்திலும் ஓர் ஏக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/122&oldid=598192" இலிருந்து மீள்விக்கப்பட்டது