பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 கண்டுதான் நானும் என் மனத்திலுள்ளதைத் திறந்து பேசத் துணிந்தேன். -கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் நிகழ்த்திய சொற் பொழிவு, 31-10-1949. Mo # w அமெரிக்காவும் இந்தியாவும் இந்தியாவின் குரலும் அமெரிக்க ஐக்கிய காட்டின் குரலும் வேறுபட்டிருப்பது போலத் தோன்றினும், இரண்டுக்கும் பொதுவான விஷயங்கள் நிறைய இருக் கின்றன. உங்களைப் போலவே நாங்களும் ஒரு புரட்சி யின் மூலம் எங்கள் சுதந்தரத்தை அடைந்தோம். ஆனல் எங்கள் வழிகள் மட்டும் வேறக இருந்தன. உங்களுடைய குடியரசை நிறுவியவர்கள் காட்டிய வழியிலேயே, நாங்களும் சமஷ்டிக் கொள்கையில் ஒரு குடியரசை அமைத்துக் கொள்கிறேம். இராஜ்யங் களுக்கும் மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கியத்திற்கும் இடையில் சுமுகமான உறவு நிலவுவதற்காக, அவை களின் அதிகாரங்களே இந்த ஐக்கிய காட்டுக் குடியர சில் உள்ளது போல காங்களும் சமாநிலைப் படுத்தி வைத்துக் கொள்வது அவசியமாகிறது. ஏனெனில் இந்தியாவும் பெரியதோர் நாடு. எங்களுடைய அர சியல் சட்டத்திலும், சுதந்தரம், சமத்துவம், முன்னேற் றம் ஆகியவற்றில் நாட்டமுள்ள மனிதர்கள் அனைவரும் விரும்பும் அடிப்படையான மானிட உரிமைகளை முன் னணியில் வைத்திருக்கிறேம். அவை தனி மனிதனின் சுதந்தரம், மக்களின் சமத்துவம், சட்ட முறைப்படி ஆட்சி கடத்தல் ஆகியவை. ஆதலால் சுதந்தர நாடுக ளோடு நாங்கள் வந்துசேருகையில், எங்கள் ஸ்தாபனங் களில் ஜனநாயகம் வேருன்றி யிருக்கின்றது. எங்கள் மக்களின் சிந்தனையிலும் அது வளர்ந்து வந்துள்ளது. -நியூயார்க் நகரில் கிழக்கு மேற்குச் சங்கத்தில் ஆற்றிய சொற்பொழிவு, 19-10–1949.