பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையாக்கினர். அதுவும் அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றே:

"தமிழில் இலக்கிய அமைப்பு, வசனம் அதாவது உரைநடை, கவிதை அல்லது செய்யுள் நடை என இரண்டே பிரிவாகத்தான் இதுவரை இருந்து வந்திருக் கிறது. இப்பொழுது சிலர் இவைகள் இரண்டிலுமுள்ள சிற்சில அம்சங்களைக் கூட்டி ஒரு அவியலாகச் செய்து அதனை வசன கவிதை என்று சொல்லுகிருர்கள். இவ்வழி தமிழ் பாஷைக்கே புதுமையானது-புரட்சிகரமானதுங்கூட.

வால்ட் விட்மன்னும், எட்வர்ட் கார்ப்பென்டரும் ஆங்கிலத்தில் வசன கவிதை புனைந்திருக்கலாம். நான்கு வேதங்களும் வடமொழியில் வசன ரூபத்தில் இருக்கலாம். கவிளுெழுகும் காதம்பரி சம்ஸ்கிருத வசன காவியமாக இருக்கலாம். தாகூர் வங்காளியில் வசன கவிதை எழுதிக் குவித்தும் இருக்கலாம். ஆனல் தமிழுக்கு வசன கவிதை புதிது என்பது மட்டும் நிச்சயம். பல்லாயிர வருஷங்களாக பனம்பாரளுர் காலத்திலிருந்து பாரதியார் காலம் வரையில் கையாளப்படாத ஒரு நவீன முயற்சி இது.

அகவலே வசன கவிதை என அறியாதோர் கூறலாம். அது தவறு. அகவலுக்கு யாப்புக்குரிய எல்லா லட்சணங் களும் உண்டு. வசன கவிதைக்கு இந்தச் செய்யுள் லட்சணங்களில் ஒன்றிரண்டு குறையும். இதுதான் தாங்கள் எழுதுவது கவிதை'யல்ல, வசன கவிதை' என்று அதை எழுபவர்களே கூறுவதன் காரணமும் கூட. -

தமிழ் இலக்கிய சரித்திரத்திலேயே நான் அறிந்த மட்டில் இதுவரை கவிதைகள் யாப்பிலக்கணத்துக்கு அடங்கியே வந்திருக்கின்றன. மாங்குடி மருதனுர் முதல் மகாமகோபாத்தியாய சுவாமிநாத ஐயர் வரை செய்யுள் பாடிய எவரும் இதே முறையைத்தான் அனுசரித்து வந் திருப்பதாகத் தோன்றுகிறது. இளங்கோவும், சாத்தனரும், கம்பரும், சேக்கிழாரும் இப்பழ வழி சென்றே பெரும்புகழ்