பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

நா.வானமாமலை

யும் வருங்காலத்தில் நம்பிக்கையையும் வறண்டுபோகச் செய்கின்றனர். இவர்களுக்கு மிகவும் பிடித்த இலக்கியக் கருக்கள் பயங்கரக் கனவுகள், உருவெளித் தோற்றங்கள், பயங்கர மனோ விகாரங்கள் முதலியன. நாவல்களிலும் கதைகளிலும் அமெரிக்க முதலாளித்துவ எழுத்தாளர்களில் பலர் இவ்விலக்கிய வழியில் செல்கின்றனர். அவர்கள் எஸ்ராபெளண்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ், ஃபிரான்ஸ் காப்ஃகா முதலியோர் ஆவர். கவிதையில் இப்போக்கின் முதல்வர் டி. எஸ். எலியட். இரண்டாம் உலகப் போரின் பின் உலக நிலையைப் பயங்கர முட்செடிகளும் வனவிலங்குகளும் நிறைந்த பாலைவனமாக, ‘லேஸ்ட்லேண்ட்’ என்ற கவிதையில் இவர் சித்தரிக்கிறார். மனிதன் உருப்படமுடியாத பிராணி. இவன் விலங்கிலும் தாழ்ந்த வாழ்க்கையை நோக்கிச் செல்கிறான் என்பது இவரது கொள்கை.

இவர்களது செல்வாக்கு, தற்காலத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பிலக்கியங்களில் பெரிதும் காணப்படுகிறது. எந்த அளவுக்கு இவர்களது கொள்கையின் பாதிப்பு தமிழ் நாவல்களிலும் புதுக்கவிதையிலும் சிறுகதைகளிலும் உள்ளன வென்று நாம் ஆராய்தல் வேண்டும்.

முன்னர் கூறியபடி ஜீன்பால் சார்த்ரே என்ற புகழ்பெற்ற பிரெஞ்சுக் கவிஞர் எக்சிஸ்டென்ஷியலிசம் என்ற தத்துவத்திலிருந்தும், ஃபிராய்டின் கொள்கைகளிலிருந்தும் தமது கலை இலக்கியக் கொள்கையை உருவாக்கினார். அவரைப் பின்பற்றுவோர் ஐரோப்பிய இலக்கிய உலகத்தில் மிகப்பலர், இவர்களில் ஒரு பிரிவினர் சமயத்திற்கு அழுத்தம் கொடுப்பவர்கள். இவர்கள் மார்ஸ்ல், ஜாஸ்பர்ஸ், ஸ்ர்டியேல் முதலியோர். சார்த்ரே இப்பிரிவைச் சேர்ந்தவரல்லர். அவர் நாத்திக எக்சிஸ்டென்ஷியலிசம் (Atheistic Existentialism) பிரிவைச் சேர்ந்தவர். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் சார்த்ரே, ஹைடக்கர், காமஸ் முதலியோர். ஐரோப்பியத் தத்துவங்கள், அறிபவன், அறியப்படுவது (Subject-Object) என்ற கருத்துக்களை விளக்குகின்றன. இவற்றிடையே முரண்நிலை இருப்பதாகக் கருதுகின்றன. ஆனால், எக்சிஸ்டென்ஷியலிஸ்டுகள் இதனை மறுத்து, (Subject-Object) அறிபவனும் அறியப்படுவதும் ஐக்கிய நிலையில் இருப்பதாகக் கருதுவர். இவ் வொற்றுமையை ‘எக்சிஸ்டென்ஸ்’ என்று கூறுவர். இவ்' வொற்றுமையை அறிய மனிதன் ‘எல்லை நிலையில்’ (Border linę Situation) இருத்தல்வேண்டும். அது சாவு போன்ற நிலை. உயிரோடிருப்பதும், அதனை நீக்குவதும் முரண்பட்டவை. அதன் எல்லைநிலை சாவு. இந்நிலையில் உலகம்