பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

நா. வானமாமலை



பாலுறவுச் சவாரி
குதிரையேற்றத்தில் உருவகமாகியது.

குதிரைச்சவாரி பற்றிய வருணனைகள் தமிழிலக்கியத்திலும் தமிழ்க்கதைப் பாடல்களிலும் எத்தனை எத்தனையோ உண்டு. கதைப் பாடல் மரபு ஒரு ஃபார்முலாதான். கவிதைகள் பற்பல விதமாகச் சுவையூட்டுவனவாக உள்ளன. ஸ்காட்டிஷ் கதைப் பாடல்களில் ‘(ballads)’ குதிரையேற்றம் பற்றிய வருணனைகள் பலவிதமான சுவையுடையனவாக உள்ளன. இங்கு இவருக்குத் தோன்றியது பாலுறவுச் சவாரிதான்.

இந்தப் பட்ட மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றுகிற புதிய ஜீவரசத்தைச் சமூக நிலத்தினின்றும் உறிஞ்சிக்கொண்டு வளருகிற மரங்களில், பலநிறப் பூக்களும் பூக்கத் தான் செய்கின்றன.

போலி அரசியல்வாதிகளைச் சாடுகிற கவிதைகள், சமூகச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டிப் போராட எழுச்சியூட்டும் கவிதைகள், வரலாற்று நன்னோக்கக் கவிதைகள், உடைமையற்ற வர்க்கம் ஒன்றுபட்டுத் தங்களுக்கு இல்லாமையையும் தங்களை ஏமாற்றி வாழ்பவர்களுக்குத் தங்கள் உழைப்பின் விளைவு முழுவதையும் வழிமாற்றியும் கொடுக்கும் சமுதாயத்தை அழித்து, அந்த அழிவின்மீது சமத்துவம், உழைப்பின் உயர்வு, உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற அடிப்படையில் உலகில் அமைந்துள்ள சோசலிச முகாமில் உள்ள நாடுகளைப் போல நாமும் சோசலிசத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் கவிதைகள் தோன்றுகின்றன. இவை இப்போது முன்னர் தோன்றியதைவிட மிக அதிகமாகவே தோன்றுகின்றன. ஏனெனில் இவற்றை வெளியிடப் பல பத்திரிகைகளை இக்கொள்கையில் ஆழ்ந்த பிடிப்புள்ள இளைஞர்கள் தோற்றுவித்துள்ளார்கள். இவர்கள் இருண்மையின் எதிரிகள்.

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலும் ஒளி உண்டாகும்

என்ற பாரதியின் நல்வாக்கை நம்புகிறவர்கள். இவர்களிலே கூடச் சிலர் சீரழிந்த சமுதாயத்தின் சாக்கடை நீரை அலசிக் கொண்டிருக்கிறார்கள். மார்க்ஸ் கூறியபடி, இந்த உலகத்தை எத்தனையோ முறை யார் யாரோ விமர்சித்தாகிவிட்டது. உலகை மாற்றுவது எப்படி என்பதுதான் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை அணுகுகிற சோசலிஸ்டுக் கவிஞர்களும் தோன்