பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

13


மருந்தையும் அளவோடு உண்டால் குணம் தருகிறது. மருந்தும் அளவை மீறினால் மரணம் வந்து விடுகிறது. மரணம் என்பது காலத்தின் காயம் என்று அழைக்கப்படுகிறது. (ம= காலம். ரணம் = காயம்)

மருந்து என்ற சொல்லுக்கு அமுதம் என்று அர்த்தம். முதம் என்றால் உவகை. அ என்றால் உள்ளும் புறமும். உள்ளும் புறமும் உவகை தருவதுதான் மருந்தின் குணம்.

அதுபோலவே, மனிதராலும் மருந்தாக உதவ முடியும். மனிதரின் சொல்லானது ஒருவருக்கு குணமும் தரலாம். ரணமும் தரலாம். மரணமும் தரலாம்.

அது ஒவ்வொரு மனிதரின் பண்பாட்டைப் பொறுத்தே அமையும். நீங்களும் சுவையான விருந்தாக, சுகமான மருந்தாக வாழலாம்.


6. ஆக்கமும் தேக்கமும்

வாழ்க்கைக்கு நல்ல இலட்சியம் வேண்டும்.

பணம் மட்டுமே லட்சியமல்ல. பண்பாடு அவசியம். அந்த பண்பாடு என்பது பிறருக்காக வாழ்வதல்ல. பிறர் போற்ற வேண்டும் என்று நடிப்பதல்ல.

தனக்காக, தன் தேக நலனுக்காக தினமும் தொடரும் மன அமைதிக்காக ஒழுக்கத்துடன் வாழ்வது.

உண்மையான இலட்சியத்தில் உற்சாகமான மனம் ஊஞ்சலாடும். உணர்வுகளில் வலிமை கூடும். அவரது