பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

157


தினம் எது நடந்தாலும் திணறிப்போகாது சரி என்று ஏற்றுக் கொள்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் (தின+சரி) தினசரி என்றனர்.

எந்த முடிவையும் ரம்யமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக. ஆற்றல் மிக்க மனதை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வருவதை வரவு என்று வரவேற்பதைத்தான் (வா+ரம்) வாரம் என்றனர். எவ்வளவுதான் முயற்சித்தாலும் வேண்டாததே விளைகிறபோது. பெரிய அளவில் தம்பிடித்து தாக்குப் பிடிப்பதையே மாதம் என்றனர்.

அப்படியே தினசரியும் வாழ்ந்து இந்த வாழ்வை உன் அதிகாரத்தின் கீழ் ஆட்சி செய்ய வேண்டும் என்றனர். அதைத்தான் ஆண்டு என்றனர்.


155. சோதனையும் வேதனையும்

மனிதர்களுக்குக் கொஞ்சமாவது சோதனைகளும், வேதனைகளும் இருக்கப் போய்தான் இந்த அளவுக் காவது மனிதத் தன்மையோடும் மனிதாபிமானத்தோடும் உலவுகின்றார்கள்.

இல்லையேல் மனதிலே அரக்கர்களாகவும், செயலிலே விலங்குகளாகவும் அல்லவா மாறிப்போய் இருப்பார்கள்.

எத்தனை எத்தனை வழிகளில் மடக்கப் பட்டிருக்கின்றார்கள் இந்த மனிதர்கள் என்பது இப்பொழுதல்லவா புரிகின்றது.