உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

கவந்தனும் காமனும் ஒரு நகரத்திலே இரவு மணி எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். நாகரிகத்தின் உச்சியைக் காணவேண்டும் என்றால், அந்த நகரத்தை, ஏன் - எந்தப் பட்டணத்தையும், இரவில்தான் பார்க்கவேண்டும். நீங்கள் இரவு எட்டு மணிக்குமேல் சென்னைமா நகரில் சுற்றிப் பார்த்திருக்கிறீர்களா? சுற்றியிருந்தால் கீழே சொல்லும் விஷயம் உங்களுக்குப் பிரமிப்பை உண்டாக்காது. கண்ணைப் பறிக்கும் விளக்குகள். பறிக்கும் நாகரிகம்! நான் உள்ளத்தைப் மனிதனின் உயர்வையும், உடையையும் ஒரே காட்சி யில் காண்பிக்கும் நாகரிகச் சின்னங்கள்! இது கலியுகமல்ல, விளம்பர யுகம் என்பதற்குப் பொருள் தெரியவேண்டுமானால், இந்த நகரத்தின் இரவைக் காணவேண்டும். இந்தக் கூட்டங்கள்!- ஏன் இவ்வளவு அவசரம்? இதுதான் இதுதான் நாகரிகத்தின் அடிப் படையான தத்துவம் -- போட்டி, வேகம்! டிராம் வண்டிகளின் 'கண கண'வென்ற ஓலம். ஒரு வேளை இது நாகரிக் யக்ஷனின் வெற்றிச் சிரிப்போ என்னவோ? பெண்களின் பல் வரிசைக்கு முத்துக் கோத்தாற் போல் என்கிறார்கள். இந்த வரிசையான மின்சார விளக்குகளுக்கு உபமானமாகத் தேவலோகத்திலும் இவ்வளவு பெரிய முத்துக் கிடையாதே! 9