உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

166 புதுமைப்பித்தன் கதைகள் தைந்து வருஷமாக உழைத்துப் போட்டும் என்ன பலன்? நாக்குக்கு ருசியாய்ச் சாப்பிட முடிந்ததா? என்ன பண்ணி விடுவான்? கொஞ்ச தூரம் சென்ற பிறகுதான் செருப்பைக் கூடக் கடையிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார் என்ற உணர்வு தட்டியது. ற நல்ல காலமாக எதிரில் யாரையும் காணோம். 'பார்த் தால்தான் என்ன?கடையைப் பூட்டினபிறகு நேரே வீட்டிற் குத்தான் போகவேண்டுமா? நம்ம நினைப்பு அவனுக்கெப் படித் தெரியும்? ஸ்டேஷனுக்கு வந்தாய்விட்டது. பெட்ரோமாக்ஸ் விளக்கடியில் தூங்கும் சில்லறைச் சிப்பந்திகள், பக்கத்து வெற்றிலை பாக்குக் கடையில் வாயடி யடிக்கும் போர்ட்டர் கள்! வெளிக்கேட்டில் அவ்வளவு கூட்டம் இல்லை. ரயிலுக் குக் கூட்டம் இருக்காததும் நல்லதுதான் என்று நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டார் பிள்ளை. 6. டிக்கட் கவுண்டரில் பத்தே காலணாவை வைத்துவிட்டு தூத்துக்குடி!" என்றார் பிள்ளை. அதற்குள் நாவறண்டு விட்டது. "எங்கே?" என்றார் டிக்கட் குமாஸ்தா. பிள்ளை திடுக்கிட்டார். "தூத்துக்குடி!" என்றார் மறுபடியும். வாயில் என்ன கொழுக்கட்டையா தெளிவாகத்தான் சொல்லேன்! என்றுகொண்டே ஒரு டிக்கெட்டை 'பஞ்ச்' செய்துகொடுத்தார் குமாஸ்தா. அப்பாடா! பிள்ளையவர்கள் நிம்மதியடைந்தவர்போல் மூச்சை உள்ளுக்கு வாங்கி மெல்ல விட்டுக்கொண்டு பிளாட்பாரத் தில் நுழைந்தார். வண்டி நின்றுகொண்டிருக்கிறது. புறப் பட இன்னும் பத்து நிமிஷம். ஒரு சோடா விற்பவனும், ஆமவடை - முறுக்கு - போளி - ஐயரும் குரல் பிளாட்பாரத்தின் மேலும் கீழுமாகக்காண்பித்து நடந்தனர். லக்கேஜ் தபால் வண்டிப் பக்கத்தில்தான் ஸ்டேஷன் மாஸ்டரும், ஸ்டேஷன் சிப்பந்திகளும்! தொடரின் பின்

வரிசையைப்