உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

மனித யந்திரம் "ஐயா! ஐயா" என்றார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. 159- "என்ன வே, இவ்வளவு நேரம்!" என்று புரண்டு கொண்டே கொட்டாவி விட்டார் முதலாளி ஐயா. "இல்லே, சோலி இருந்தது. எம் பத்துலே இண்ணக்கி பதினொண்ணே காலணா எளுதிருக்கேன்!" என்றார் பிள்ளை. அப்பொழுதும் அந்த நாவறட்சி போகவில்லை. "சரி! விடியென வரப்போ மூக்கனெ வண்டியைப் போட்டுக்கிட்டு வரச் சொல்லும். சந்தைக்குப் போக வேண்டாம்!" என்றார். சொல்லிவிட்டு, கொடுங்கையைத் தலைக்கு வைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலாளி ஐயாவைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டே நின்றார். அப்புறம் மெதுவா கத் திரும்பி நடந்தார்.