உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

192 புதுமைப்பித்தன் கதைகள் பாதி வேலெகூட சரியாச் செய்யத் தெரியாதே. என்னெக் கட்டோடே கூட்டிக்கிட்டுப் போவ ஒனக்கு முடியுமா?" அது "எனக்கு முடியாத ஒன்று இருக்கிறதா? நான் இது வரை எத்தனை பேரை அழைத்துச் சென்றிருக்கிறேன்- உனக்கெப்படித் தெரியும்? நீ என்ன புராணம் இதிகாசம் படிக்கக் கூடிய ஜாதியில் பிறந்திருக் கிறாயா?......" இப்படிச் சொல்லிக்கொண்டு போகும் பொழுதே, யமனுக்குத் தானே தனக்குப் பொய் சொல்லிக் கொள்கிறது கிறது போலப் பட்டது; ஏனென்றால் அவனுக்கு மார்க்கண்டன் சமாசாரமும் நினைவுக்கு வந்துவிட்டது. 'அதெல்லாம் இருக்கட்டும்.நீ என்னெக் கூட்டிக் கிட்டு போய்த்தின்னா, நான் இருந்த நெனப்பெ, என்னெப் பத்தின நெனப்பெ. நான் வச்சிருந்த பொளங்கின சாமா னெல்லாம் ஒன்னோடெ எடுத்துக்கிட்டுப் போவ முடியுமா? என்னமோ எமன் கிமன் இன்னு பயமுறுத்திரியே, ஒன் தொழிலே ஒனக்குச் செய்யத் தெரியலியே! அதெத் தெரிஞ்சிக்கிட்டு எங்கிட்ட வா!" என்று காலை நீட்டிக் கொண்டு முழங்காலைத் தடவினாள் கிழவி. "என்ன சொன்னாய்! எனக்கா தெரியாது? இதோ பார். உன்னை என்ன செய்கிறேன்!" என்று உறுமிக் கொண்டு எழுந்தான் யமன். அந்தோ! அவன் வீசவேண் டிய பாசக அவனே கட்டிய கொடியாகத் தொங்கியது! கயிறு உன்னாலே என் உசிரெத்தானே எடுத்துக்கிட்டுப் போவ முடியும்? இந்த உடலைக் கூடத் தூக்கிட்டுப் போவ உனக்குத் தெறமை இருக்கா? யோசிச்சுப் பாரு. ஒண்ணெ வேறயா மாத்த முடியும்; உன்னாலே அழிக்க முடியுமா? அடியோட இல்லாமே ஆக்க முடியுமா? அதெ உன்னைப் படைச்ச கடவுளாலேயே செய்ய முடியாதே! அப்றமில்ல உனக்கு? பழசுன்னா அவ்வளவு கிள்ளுக் கீரேன்னா நெனச்சே?" என்று பொக்கை வாயைத் திறந்து காட்டிச் சிரித்தாள் கிழவி. கையைப் பிசைந்துகொண்டே வெளியேறினான் மயன். அன்றுதான் அவனுக்கு உண்மையான தோல்வி. மார்க்